Home /News /national /

1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு திங்கட்கிழமை முதல் பள்ளிகள் திறப்பு: மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு

1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு திங்கட்கிழமை முதல் பள்ளிகள் திறப்பு: மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

ஜன.24ம் தேதியில் இருந்து 1 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது

    1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு திங்கட்கிழமை முதல் பள்ளிகளை திறக்க மகாராஷ்டிரா மாநில கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

    இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை உச்சத்தில் இருந்து வருகிறது. இதன் காரணமாக நாட்டில் பெரும்பாலான மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் லேசாக அதிகரிக்க தொடங்கியதுமே அந்ததந்த மாநில அரசுகள் பள்ளிகளுக்கு முதலில் விடுமுறை அறிவித்தன.

    கொரோனா பரவல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதால், குழந்தைகளின் கற்றல் திறன் பாதிக்கப்படுவதாக பெற்றோர் மத்தியில் கவலைகள் எழுந்தன. மேலும், இதுபோன்று மாதகணக்கில் தொடர் விடுமுறை விடுவதால், குழந்தைகளின் கல்வி இடைநிற்றலும் நாடுமுழுவதும் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    சமீபத்தில் கூட உலக வங்கி கல்வி இயக்குனர் ஜெய்ம் சாவேத்ரா, கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளிகளை மூடுவதில் நியாயமில்லை என்று தெரிவித்திருந்தார். மேலும், கல்வித்துறையில் கொரோனா ஏற்படுத்திய தாக்கம் குறித்து அவர் நடத்திய ஆய்வு முடிவுடன் விரிவான அறிக்கையும் அவர் வெளியிட்டிருந்தார். அதில், உணவகங்கள், பார்கள் மற்றும் வணிக வளாகங்களை திறந்து வைத்துவிட்டு, பள்ளிகளை மூடி வைத்திருப்பது என்பது அர்த்தமற்றது.

    மேலும் படிக்க: 10, 12 மாணவர்களுக்கும் ஆன்லைனில் வகுப்பு நடத்துங்கள்.. அரசுக்கு கோர்ட் அறிவுறுத்தல்

    பள்ளிகளைத் திறப்பதற்கும், கொரோனா வைரஸ் பரவுவதற்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை. இதனை காரணம் காட்டி, பள்ளிகளை மூடுவதில் எந்த நியாயமும் இல்லை. இனி புதிய கொரோனா அலைகள் வந்தாலும் பள்ளிகளை மூடுவது என்பது கடைசி நடவடிக்கையாக இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், மகாராஷ்டிராவில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு திங்கட்கிழமை முதல் பள்ளிகளை திறக்க அம்மாநில கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

    இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட், குழந்தைகளின் கற்றல் திறன் குறைந்து வருவதால், பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்தும், கோரிக்கைகள் வந்தன. இதனிடையே, கடந்த வாரம் மகாராஷ்டிராவில் பள்ளிகளை மீண்டும் திறக்க கோரி சுகாதாரத்துறை அமைச்சர் வலியுறுத்தியிருந்தார்.

    அதன்படி, ஜன.24ம் தேதியில் இருந்து 1 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளிகளை திறக்கும் முடிவுக்கு முதல்வர் உத்தவ் தாக்கரே ஒப்புதல் தெரிவித்துள்ளார். இதையடுத்து, கொரோனா நெறிமுறைகளை பின்பற்றி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    மகாராஷ்டிராவில் கடந்த 24 மணிநேரத்தில் 43,697 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 49 பேர் உயிரிழந்துள்ளனர். ஒமைக்ரான் தொற்றால் 214 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மாநிலத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 73,25,825 ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 1,41,934 ஆக அதிகரித்துள்ளது.

    மேலும் படிக்க: கொரோனா காரணமாக பள்ளிகளை மூடுவதில் நியாயமில்லை: உலக வங்கி கல்வி இயக்குனர்!
    Published by:Esakki Raja
    First published:

    Tags: School, School open, School Reopen

    அடுத்த செய்தி