பள்ளிகள் திறக்கப்படும் நாளை அறிவித்த ஆந்திர பிரதேச அரசு

கோப்புப் படம்

ஆந்திராவில் பள்ளிகளை செப்டம்பர் 5-ம் தேதி திறக்க முடிவு செய்திருப்பதாக அம்மாநில பள்ளி கல்வித்துறை அமைச்சர் ஆதிமுலாபு சுரேஷ் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  ஆந்திராவில் பள்ளிகளை திறப்பது குறித்து முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியுடன் ஆதிமுலாபு சுரேஷ் நேற்று ஆலோசனை மேற்கொண்டார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா பரவலால் மூடப்பட்டுள்ள பள்ளிகளை செப்டம்பர் 5ம் தேதி திறக்க உள்ளதாகத் தெரிவித்தார்.

  மேலும் படிக்க...

  சென்னை அருகே சாதிமறுப்பு திருமணம் செய்த காதல் தம்பதி அடுத்தடுத்து தற்கொலை

  எனினும், அப்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப பள்ளி திறப்பு பற்றி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

  பள்ளிகள் திறக்கப்படும் வரை மாணவர்களின் வீடுகளுக்கே சென்று சத்துணவு வழங்கப்படும் என்று கூறிய அவர், இந்த ஆண்டு முதல் அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் தொடங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
  Published by:Vaijayanthi S
  First published: