ஜம்மு-காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் பள்ளி மற்றும் கல்லூரிகளை திங்கட்கிழமை முதல் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது சட்டப்பிரிவை மத்திய அரசு நீக்கியது. இதனால் ஏற்பட்ட பதற்றம் காரணமாக, கடந்த 3 வாரங்களாக காஷ்மீர் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன.
இதையடுத்து, ஜம்மு, உதம்பூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டு வருவதால், மெல்ல மெல்ல மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது.
ஸ்ரீநகரில் உள்ள மசூதிகளில் முதல்முறையாக வெள்ளிக்கிழமை தொழுகைக்கு இன்று அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், வரும் திங்கள் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகளை திறக்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
Published by:Yuvaraj V
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.