ஜம்மு மாவட்டத்தில் இன்று முதல் 144 தடை உத்தரவு வாபஸ்... பள்ளிகள் திறப்பு...!

ஜம்மு மாவட்டத்தில் இன்று முதல் தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டதால், கடந்த ஒரு வாரகாலமாக மூடப்பட்டிருந்த பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்பட்டன.

news18
Updated: August 10, 2019, 11:29 AM IST
ஜம்மு மாவட்டத்தில் இன்று முதல் 144 தடை உத்தரவு வாபஸ்... பள்ளிகள் திறப்பு...!
வேன்கள் மூலம் தங்கள் குழந்தைகளை பள்ளிகளுக்கு பத்திரமாக பெற்றோர் அனுப்பி வைத்தனர்.
news18
Updated: August 10, 2019, 11:29 AM IST
ஒரு வாரத்திற்கு பிறகு ஜம்முவில் இயல்புநிலை திரும்பியதையடுத்து பள்ளிகள், கல்லூரிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகியவை யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளதால் சர்தார் வல்லபபாய் பட்டேலின் பிறந்த நாளான அக்டோபர் 31 முதல் ஜம்மு காஷ்மீரும் லடாக்கும் தனித்தனி யூனியன் பிரதேசங்களாக இயங்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், ஜம்முவில் கத்துவா மற்றும் சம்பா மாவட்டங்களில் நேற்று 144 தடை உத்தரவு தளர்த்தப்பட்டதை அடுத்து மக்களின் இயல்பு வாழக்கை மீண்டும் திரும்பியுள்ளது.


ஜம்மு மாவட்டத்தில் இன்று முதல் தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டதால், கடந்த ஒரு வாரகாலமாக மூடப்பட்டிருந்த பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்பட்டன.

வேன்கள் மூலம் தங்கள் குழந்தைகளை பள்ளிகளுக்கு பத்திரமாக பெற்றோர் அனுப்பி வைத்தனர். மாணவ, மாணவிகள் மிகுந்த ஆர்வத்துடன்  வகுப்பறைகளுக்கு சென்றனர்.

ஜம்முவில் காலை 11 மணிமுதல் மாலை 5 மணி வரை கடைகள் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஸ்ரீநகரில் தடை உத்தரவு நாளை தளர்த்தப்படலாம் என்றும் ஓரிரு நாட்களில் தொலைத் தொடர்பு சேவைகள் சீராகலாம் என்றும் ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார்.

Loading...

Also see...

First published: August 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...