ஹோம் /நியூஸ் /இந்தியா /

கேரளாவில் பள்ளி சுற்றுலா பேருந்து விபத்து.. மாணவர்கள் உள்பட 9 பேர் பலியான சோகம்

கேரளாவில் பள்ளி சுற்றுலா பேருந்து விபத்து.. மாணவர்கள் உள்பட 9 பேர் பலியான சோகம்

பள்ளி வாகனம் விபத்து - 9 பேர் உயிரிழப்பு

பள்ளி வாகனம் விபத்து - 9 பேர் உயிரிழப்பு

கேரள மாநிலம் பாலக்காடு அருகே வடக்கன் சேரியில் நள்ளிரவு 12 மணியளவில் பள்ளி மாணவர்கள் சுற்றுலா சென்ற பேருந்து, கேரள அரசு பேருந்தின் பின்புறம் மோதியதில் 9 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 41 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kerala, India

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே  உள்ள முலாந்துருத்தி பகுதியை சேர்ந்த தனியார் பள்ளியில் படிக்கும் 10, 11 , 12 ஆம் வகுப்பு மாணவர்கள் தனியார் சொகுசு பேருந்தில் உதகைக்கு கிளம்பினர். 42 மாணவ, மாணவிகளும் 5 ஆசிரியர்கள், இரு ஓட்டுனர்கள் என மொத்தம் 49 பேர் பேருந்தில் பயணித்தனர். மாணவர்களுடன் வந்த தனியார் பேருந்து பாலக்காடு மாவட்டம் வடக்கஞ்சேரி அருகே கொள்ளமத்ரா பேருந்து நிறுத்தம்  அருகே வந்த போது, அங்கு பயணிகளுடன் நின்று கொண்டிருந்த கேரளா அரசு பேருந்தின் பின்புறப்பகுதியில் எதிர்பாராத விதமாக மோதியது.

இதில் கேரள அரசு பேருந்தின் பின்புற பகுதியும், மாணவர்களுடன் வந்த சொகுசு பேருந்தின் முன்புற பகுதியும் கடுமையாக சேதமானதுடன், சொகுசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தனியார் சொகுசு பேருந்தில் பயணம் செய்த  மூன்று மாணவிகள், இரண்டு மாணவர்கள், ஒரு ஆசிரியர் ஆகிய 6 பேரும், கேரள மாநில அரசு பேருந்தில் பயணித்த மூன்று பேர்  என மொத்தம் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பேருந்துகளில் பயணித்த 25  பேர்  காயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த பாலக்காடு மாவட்ட காவல்துறையினரும், தீயணைப்பு துறையினரும் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இறந்த நபர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக பாலக்காடு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

 Also see... குமரி பகவதியம்மன் கோயில் திருவிழாவில் பரிவேட்டை நிகழ்ச்சி.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..

காயம் அடைந்தவர்கள் பாலக்காடு அரசு மருத்துவமனை மற்றும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த தனியார் சொகுசு பேருந்து அதி வேகமாக இயக்கப்பட்டதே விபத்துக்கு காரணம் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து பாலக்காடு மாவட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குரிப்பிடத்தக்கது.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Kerala, Road accident