• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • முகத்தை மூடி ஆசிரியரை சரமாரியாக தாக்கிய 9ம் வகுப்பு மாணவர்கள் - சொன்ன காரணத்தால் அதிர்ச்சி!

முகத்தை மூடி ஆசிரியரை சரமாரியாக தாக்கிய 9ம் வகுப்பு மாணவர்கள் - சொன்ன காரணத்தால் அதிர்ச்சி!

Police

Police

பள்ளி வளாகத்தில் தனியாக இருந்த ஆசிரியரின் முகத்தில் கருப்பு துணியை போர்த்தி, மூவரும் சேர்ந்து சரமாரியாக தாக்கி அடித்து உதைத்திருக்கின்றனர்.

  • Share this:
மொபைல் போன் பயன்படுத்தியதை கண்டித்தார் என்பதற்காக பள்ளி வளாகத்திலேயே 9ம் வகுப்பு மாணவரும், அவரின் நண்பர்களும் சூழ்ந்து கொண்டு ஆசிரியரை அடித்து உதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

முன்பெல்லாம் ஆசிரியர்கள் மீது மாணவர்கள் பயமும், மரியாதையும் கொண்டிருப்பார்கள். பெற்றோருக்கு அடுத்த ஸ்தானத்தில் நல்லவற்றை சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர்களை பயபக்தியுடன் நடத்தினார்கள் மாணவ மாணவியர். ஆனால் மாறிவரும் டெக்னாலஜி யுகத்தில், எல்லாமே தலைகீழாக மாறி வருவதை சமூக வலைத்தளங்கள் நம் கண்முன்னே காட்டிக் கொண்டிருக்கின்றன.

உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூரில் உள்ள ஜூபிலி பள்ளியில் தான் அந்த அதிர்ச்சிகர சம்பவம் அரங்கேறியிருக்கிறது. அந்த பள்ளியின் கணிப்பொறி ஆசிரியரான சையது வசிக் அலி என்பவர் தனது வகுப்பில் மாணவர் ஒருவர் மொபைல் பயன்படுத்தியதை பார்த்து அந்த மாணவரை இனி வகுப்பில் மொபைல் பயன்படுத்தக் கூடாது என கண்டித்திருக்கிறார். இதனால் அந்த ஆசிரியர் மீது கடுப்பில் இருந்து வந்த 9ம் வகுப்பு மாணவர், அவருடைய மேலும் இரு நண்பர்களை துணைக்கு அழைத்துக் கொண்டு, பள்ளி வளாகத்தில் தனியாக இருந்த அந்த ஆசிரியரின் முகத்தில் கருப்பு துணியை போர்த்தி, மூவரும் சேர்ந்து அவரை சரமாரியாக தாக்கி அடித்து உதைத்திருக்கின்றனர்.

Also read: 2ம் வகுப்பு மாணவனை முதல் மாடியிலிருந்து தலைகீழாக தொங்கவிட்டு தலைமையாசிரியர் அளித்த கொடூர தண்டனை!

ஆசிரியர் போலீசில் கொடுத்த புகாரின் அடிப்படையில் பள்ளிக்கு வந்து விசாரணை நடத்திய போது 9ம் மாணவரும், மேலும் இருவரும் சேர்ந்து ஆசிரியரை அடித்து உதைத்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளில் இருந்ததை பார்த்துள்ளனர். பின்னர் முக்கிய குற்றவாளியான அந்த 9ம் வகுப்பு மாணவரை போலீசார் கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர். ஆசிரியரை அடித்து உதைத்த மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Also read:   JioPhone Next ஸ்மார்ட்போன் தீபாவளிக்கு வெளியீடு… ₹ 1,999 செலுத்தி வாங்கலாம்…. சிறப்பம்சங்கள் இதோ….

மொபைல் பயன்படுத்தக் கூடாது என கண்டித்ததற்காக ஆசிரியர் என்றும் பாராமல் பள்ளி வளாகத்தில் வைத்தே ஆசிரியரை மாணவர்கள் அசட்டுத் துனிச்சலுடன் அடித்து உதைத்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. மாணவ சமூகம் ஒழுக்கத்துடன் செயல்படுவது எதிர்கால சமூகத்தை நல்வழிப்படுத்துவதாக அமையும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: