Home /News /national /

ஃபெயில் ஆக்கியதால் ஆசிரியர்களை மரத்தில் கட்டிவைத்து அடித்த மாணவர்கள்.. வீடியோ வெளியாகி சர்ச்சை

ஃபெயில் ஆக்கியதால் ஆசிரியர்களை மரத்தில் கட்டிவைத்து அடித்த மாணவர்கள்.. வீடியோ வெளியாகி சர்ச்சை

மரத்தில் கட்டிவைக்கப்பட்ட ஆசிரியர்கள்

மரத்தில் கட்டிவைக்கப்பட்ட ஆசிரியர்கள்

முதலில் ஆசிரியர்களை கட்டி வைத்து தாக்கியுள்ள மாணவர்கள், பின்னர் இதனை வீடியோவாக எடுத்து அவர்களே சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Dumka, India
    பள்ளி ஆசிரியர்கள் 3 பேரை மாணவர்கள் மரத்தில் கட்டிவைத்து அடித்த வீடியோ வைரலாகி வருகிறது. ஃபெயில் ஆக்கியதால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் ஆசிரியர்ககளை தாக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ஜார்க்கண்ட் மாநிலம் தும்காவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. முதல் கட்ட தகவலின்படி, ப்ராக்டிகல் எனப்படும் செய்முறைத் தேர்வில் குறைந்த மதிப்பெண்களை மாணவர்களுக்கு  ஆசிரியர்கள் வழங்கியதாக கூறப்படுகிறது. இதனால் மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை என்றும், இதற்கு தக்க பாடம் புகட்டவே ஆசிரியர்களை மரத்தில் கட்டி வைத்து தாக்கியதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

    ஆம்புலன்ஸ் கிடைக்காததால் தம்பியின் உடலை தூக்கி நடந்த 10 வயது சிறுவன்.. உ.பியில் அவலம்

    முதலில் கட்டி வைத்து தாக்கியுள்ள மாணவர்கள், பின்னர் இதனை வீடியோவாக எடுத்து அவர்களே சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளனர். வீடியோவில் மாணவர்கள் சிலர் உருட்டுக் கட்டைகளை கைகளில் வைத்துள்ளனர். சுமார் ஒரு நிமிடம் ஓடக் கூடியதாக இந்த வீடியோ அமைந்துள்ளது.





    மாணவர்களுக்கு வேண்டுமென்றே ஆசிரியர்கள் குறைந்த மதிப்பெண்ணை அளித்தார்களா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் ஒட்டுமொத்த ரிசல்ட்டின்போது ப்ராக்டிகல் மதிப்பெண்கள் சேர்க்கப்படவில்லை என்றும், இதனால் தங்களுக்கு மதிப்பெண் குறைந்து விட்டதாகவும் மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
    Published by:Musthak
    First published:

    Tags: Jharkhand, Viral Video

    அடுத்த செய்தி