• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • 2ம் வகுப்பு மாணவனை முதல் மாடியிலிருந்து தலைகீழாக தொங்கவிட்டு தலைமையாசிரியர் அளித்த கொடூர தண்டனை!

2ம் வகுப்பு மாணவனை முதல் மாடியிலிருந்து தலைகீழாக தொங்கவிட்டு தலைமையாசிரியர் அளித்த கொடூர தண்டனை!

Principal

Principal

தலைமையாசிரியரின் இந்த செயலால் பயந்து போன அச்சிறுவன் தொடர்ந்து அழுது புலம்பிய போதும் சுமார் 10 நிமிடங்களுக்கு அப்படியே அச்சிறுவனை தொடங்க விட்டிருக்கிறார்

  • Share this:
2ம் வகுப்பு மாணவர் ஒருவரின் கால்களை பிடித்து தலைகீழாக தொங்கவிட்டு தண்டனை கொடுத்த புகைப்படங்கள் வைரலான நிலையில் பள்ளியின் தலைமையாசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுவர்கள் குறும்புத்தனம் செய்வது மிகவும் இயல்பான ஒன்று தான். வீடாக இருந்தாலும் சரி, பள்ளி என்றாலும் சரி அவர்களின் குறும்புத்தனத்துக்கு எல்லையே கிடையாது. அதற்காக அவர்களுக்கு தண்டனை கொடுப்பது சில நேரங்களில் விபரீத விளைவுகளை ஏற்படுத்திவிடக் கூடும் என்பதற்கு எடுத்துக்காட்டாக ஒரு சம்பவம் நடைபெற்றிருக்கிறது.

உத்தரப்பிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டம் அஹ்ரோரா எனும் பகுதியில் சாத்பவனா சிக்‌ஷான் சன்ஸ்தான் ஜூனியர் உயர்நிலைப்பள்ளி என்ற தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் கடந்த அக்டோபர் 28ம் தேதி 2ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவருக்கு மிகவும் அதிர்ச்சிகரமான தண்டனை ஒன்றை அளித்திருக்கிறார்.

Also read:   JioPhone Next ஸ்மார்ட்போன் தீபாவளிக்கு வெளியீடு… ₹ 1,999 செலுத்தி வாங்கலாம்…. சிறப்பம்சங்கள் இதோ….

அந்த 2ம் வகுப்பு மாணவர் தொடர்ந்து குறும்புத்தனம் செய்து வந்ததால் அதிருப்தி அடைந்த அப்பள்ளியின் தலைமையாசிரியர் மஜோஜ் விஸ்வகர்மா என்பவர், அந்த மாணவரின் கால்களை பிடித்து முதல் தளத்தின் பால்கனியில் இருந்து தலைகீழாக தொங்கவிட்டு நூதன முறையில் தண்டனை அளித்திருக்கிறார்.

தலைமையாசிரியரின் இந்த செயலால் பயந்து போன அச்சிறுவன் தொடர்ந்து அழுது புலம்பிய போதும் சுமார் 10 நிமிடங்களுக்கு அப்படியே அச்சிறுவனை தொடங்க விட்டிருக்கிறார் அந்த தலைமையாசிரியர். அந்த மாணவர் கெஞ்சி மன்னிப்பு கேட்டு கத்தி கூச்சல் போட்டவாரே இருந்ததால் பின்னர் அச்சிறுவனை தலைமையாசிரியர் விடுவித்திருக்கிறார்.

Also read:   ஆர்யன் கானை கைது செய்த சமீர் வான்கடே இப்படிப்பட்டவரா? – சக NCB அதிகாரி கூறும் உண்மைகள்!

ஒருவேளை தலைமையாசிரியரின் பிடி நழுவியிருந்தால் மாணவருக்கு என்ன நேர்ந்திருக்குமோ என கற்பனை செய்து கூட பார்க்க முடியாத நிலையில், ஆபத்தை உணராமல் தண்டனை என்ற பெயரில் மனிதநேயமற்ற செயலில் ஈடுபட்ட தலைமையாசிரியரின் இந்த செயல் சமூக வலைத்தளம் மூலம் அம்பலமானது. தலைகீழாக மாணவரை பிடித்திருந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலான நிலையில், இது குறித்து மிர்சாபூர் மாவட்ட நீதிபதி சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார்.

Also read:  சென்னையில் பிறந்தவர்.. 10 வயதில் தேசிய விருது… மறைந்த புனித் ராஜ்குமாரின் சினிமா குடும்ப பின்னணி!

மேலும் மாணவரின் தந்தை அளித்த புகாரின் பேரில் குழந்தைகள் பாதுகாப்பு சட்டப்பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தலைமையாசிரியரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தனது செயலுக்காக தலைமையாசிரியர் மன்னிப்பு கோரியது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: