SCHOOL IN MAHASHTRAS WASHIM MADE CONTAINMENT ZONE AFTER 229 STUDENTS TEST POSITIVE FOR COVID ARU
பள்ளி விடுதியில் தங்கி படித்துவந்த 229 மாணவர்களுக்கு கொரோனா பாசிட்டிவ்: பள்ளி முழுவதும் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிப்பு!
தொற்று பாதிப்புக்கு ஆளான மாணவர்களில் 151 பேர் அம்ராவதி மாவட்டத்தையும், 55 மாணவர்கள் யவத்மல் மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர். இந்த இரு மாவட்டங்களில் தான் தற்போது கொரோனா தொற்று பரவல் கடுமையாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள உண்டு உறைவிட பள்ளியின் விடுதியில் தங்கிப் படித்து வந்த 229 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அப்பள்ளியை கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவித்தது மகாராஷ்டிர அரசு.
மகாராஷ்டிராவின் வஷிம் மாவட்டத்தில் உள்ள டேகான் எனும் பகுதியில் உள்ள பாவனா பப்ளிக் பள்ளியானது மலைவாழ் மக்களின் குழந்தைகள் தங்கிப் படிக்கும் ஒரு உண்டு உறைவிட பள்ளியாகும். ஜனவரி 27ம் தேதி முதல் பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து பிப்ரவரி 14ம் தேதி முதல் மாணவர்கள் இங்கு உள்ள விடுதிக்கு வந்தனர்.
இதனிடையே மகாராஷ்டிராவில் கொரோனா பரவல் திடீரென அதிகரித்ததால் பள்ளி நிர்வாகம் சார்பில் மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் முதல் கட்டமாக 30 மாணவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து மொத்தம் உள்ள 37 மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில் அங்கு பயிலும் 229 மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. இவர்கள் அனைவருமே 5 முதல் 9ம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்கள் ஆவர்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அனைத்து மாணவர்களுமே அறிகுறிகள் இன்றி காணப்படுகின்றனர். அவர்கள் அனைவருக்குமே பள்ளியிலேயே சிகிச்சை அளிக்கப்படுகிறது. பரிசோதனையில் நெகட்டிவ் ஆன 98 மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மாணவர்கள் மட்டுமின்றி 4 ஆசிரியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காகவே இரண்டு சிறப்பு மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்ட துணை ஆட்சியர் கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் பள்ளி இருக்கும் பகுதி முழுவதும் கட்டுப்பாட்டு பகுதியாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
தொற்று பாதிப்புக்கு ஆளான மாணவர்களில் 151 பேர் அம்ராவதி மாவட்டத்தையும், 55 மாணவர்கள் யவத்மல் மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர். இந்த இரு மாவட்டங்களில் தான் தற்போது கொரோனா தொற்று பரவல் கடுமையாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவிலேயே கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையில் முதல் இடத்தில் உள்ள மகாராஷ்டிராவில் கடந்த பிப்ரவரி முதல் வாரம் வரையில் கொரோனா பரவல் கட்டுக்குள் தான் இருந்து வந்தது. இருப்பினும் பிப்ரவரி 2ம் வாரத்திற்கு பின்னர் திடீரென அங்கு மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. ஒரே மாதத்தில் 7 அமைச்சர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது மாநில அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நேற்று (பிப் 24) மட்டும் மகாராஷ்டிராவில் 8,807 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.