வெள்ளத்தில் சேதமான சான்றிதழ்கள்: மனமுடைந்த கேரள மாணவன் தற்கொலை

வெள்ளத்தில் சேதமான சான்றிதழ்கள்: மனமுடைந்த கேரள மாணவன் தற்கொலை
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: August 21, 2018, 6:00 PM IST
  • Share this:
கேரளாவில் மழை வெள்ளத்தில் தனது பள்ளி சான்றிதழ்கள் சேதமடைந்ததைக் கண்டு மனமுடைந்த மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.

இதுதொடர்பாக, போலீஸார் தெரிவித்ததாவது: கோழிக்கோடு மாவட்டம், கரந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கைலாஷ் (19). பிளஸ் 2 முடித்த இவர், அண்மையில் ஐடிஐ கல்லூரியில் சேருவதற்கான ஆணையைப் பெற்றார். இந்நிலையில், மாநிலம் முழுவதும் அண்மையில் பெய்த கனமழையில் கோழிக்கோடு மாவட்டத்தின் பல பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கின.

இதில், கைலாஷின் வீடும் தப்பவில்லை. இதையடுத்து கைலாஷும், அவருடைய பெற்றோரும் அருகிலிருந்த நிவாரண முகாமுக்கு இடம் பெயர்ந்தனர். மழை ஓய்ந்த நிலையில், கைலாஷ் தனது வீட்டுக்கு திரும்பினார்.


அப்போது அவரது பிளஸ் 2 சான்றிதழ், ஐடிஐ கல்லூரி சேர்க்கை ஆணை உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் மழையில் நனைந்து முழுவதுமாக சேதமடைந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும், அவர் வாங்கி வைத்திருந்த புது ஆடைகள், சேர்ந்து வைத்திருந்த பணம் ஆகியவையும் சேதமடைந்திருந்தன.

தனது குடும்பம் மிகவும் ஏழ்மை சூழலில் உள்ள நிலையில், இத்தகைய சோதனை நிகழ்ந்ததை எண்ணி அவர் மனமுடைந்துள்ளார். இதையடுத்து, அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில், கைலாஷின் பெற்றோர் மாலையில் வீட்டுக்கு வந்தனர். தங்களது மகனின் நிலையை அறிந்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர் என்று போலீஸார் தெரிவித்தனர்.

கூலித்தொழிலாளியான கைலாஷின் தந்தை வீட்டிலுள்ள பொருட்களை இழந்ததுடன், மகனையும் இழந்ததை அறிந்த கரந்தூர் பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
First published: August 21, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading