Home /News /national /

இந்தியாவின் உள்கட்டமைப்பை வெற்றிகரமாக கட்டமைத்த பிரதமர் மோடி

இந்தியாவின் உள்கட்டமைப்பை வெற்றிகரமாக கட்டமைத்த பிரதமர் மோடி

மோடி

மோடி

இந்தியாவின் உள்கட்டமைப்பை மிகச் சிறப்பாக கட்டமைத்ததில் பிரதமர் மோடியின் பங்களிப்பு மிக முக்கியமானது. அவர் முன்னெடுத்த திட்டங்களில் தூய்மை இந்தியா திட்டம் முக்கியமானது.

  ஓர் இரவு டோக்கியோவில், இரண்டு நாள் இரவுகள் விமானத்தில் கழித்திருந்தாலும் 2022-ம் ஆண்டு மே 25-ம் தேதி காலை 5 மணி அளவில் பாலம் விமானப் படை தளத்தில் நரேந்திர மோடி பொலிவுடன் வந்திருக்கிறார். இந்த 41 மணி நேர இடைவெளியில் 24 கூட்டங்களில் கலந்துகொண்டுள்ளார். ஒரு பிரதமராக அவருக்கு மீண்டும் வேலை நேரம் அது.

  அமைச்சரவைக் கூட்டம், உள்கட்டுமான திட்டங்கள் தொடர்பாக ஆய்வுக் கூட்டம், இதற்கிடையில் ஒடிசாவில் உயிரிழந்த ஆறு சுற்றுலாப் பயணிகளின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிக்க வேண்டும் மேலும் அந்த நாளின் இறுதியில் நாளை நான் ஹைதராபாத்திலும், சென்னையிலும் இருப்பேன் என்று ட்விட் செய்து அந்த நாளை முடித்தார். இதுதான் மோடியின் வழி.

  இந்த வாரத்தில் நரேந்திர மோடி பிரதமராக அவரது 8 ஆண்டுகளை நிறைவு செய்தார். மேலும், நவீன, உயர்தரத்துடன், எதிர்கால அம்சங்களுடன், நீடித்த உள்கட்டமைப்பு உருவாக்கும் எண்ணத்துடன் ஒன்பதாவது ஆண்டை தொடங்கியுள்ளார்.

  குஜராத்தில் 2002 - 2010 ஆண்டுக்கு இடைப்பட்ட 8 ஆண்டு காலத்தில் நாளைய கட்டுமானத்தை இன்றைக்கு எப்படி சாத்தியப்படுத்துவது என்பதைக் கற்றுக்கொண்டேன். பாலன்புர் - மெஹ்சானா - வதோதரா மற்றும் சுரேந்தரநகர் - ராஜ்கோட் - மோர்பி - கன்ட்லா திட்டம், ரயில்வே திட்டங்களான (பெஹ்ருச் தாஹெச் மற்றும் அங்கலேஷ்வர் - ஜாகாடியா), பொருளாதார யுக்தியான அகமதாபாத் - காந்திநகர் மெட்ரோ ரயில், டோலேரா - எஸ்.ஐ.ஆர் உள்ளிட்ட இரண்டு கட்ட வளர்ச்சிப் பாடங்களை நான் கையாண்டேன்.

  2014-ல் குஜராத் மாடலை டெல்லி கொண்டுவந்து அதை பலகட்டங்களில் அதிகப்படுத்தினார். முதலமைச்சர் மோடியைவிட பிரதமர் மோடி தொழில்நுட்பத்தில் சிறப்பாக செயல்படும் அரசாகவும், குறித்த நேரத்துக்கு செயல்படுத்தும் அரசாகவும் இருந்துள்ளார்.

  தூய்மை இந்தியா

  2014-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி மகாத்மா காந்தியின் 145-வது பிறந்தநாளில் உலகத்தரத்திலான பாதுகாப்பைப் பெற தூய்மை இந்தியா திட்டத்தை தொடங்கிவைத்தார். இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு ஐந்து ஆண்டுகளில் 2019 அக்டோபர் 2-ம் தேதி அனைத்து கிராமங்கள், கிராம பஞ்சாயத்துகள், மாவட்டங்கள், மாநிலங்கள், யூனியன் பிரதேசதங்கள் தங்களை திறந்தவெளி மலம் கழிக்கா பகுதிகளாக தங்களை அறிவித்துக் கொண்டன. 10 கோடி வீடுகளுக்கு மத்திய அரசு கழிவறைகளைக் கட்டிக்கொடுத்துள்ளது.

  தூய்மை இந்தியா திட்டத்தை உன்னிப்பாக கவனித்ததில் மத்திய அரசின் பங்களிப்பு நாட்டின் தன்மையை மாற்றியுள்ளது. எத்தனை கழிப்பறைகள் கட்டப்பட்டன என்பதை சரியாக தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் இதுகுறித்து நாடு தழுவிய அளவில் ஆய்வு செய்யவேண்டும்.

  வெளிநாட்டு பயணங்கள் மூலம் வெளியுறவுக் கொள்கையை வலுபடுத்திய மோடி- ஒரு அலசல்

  தூய்மை இந்தியா திட்டம் 1.0 மோடியை மிகப்பெரிய உருவமாக மாற்றியுள்ளது. தற்போது தூய்மை இந்தியா 2.0 நகரங்களை குப்பைகள் இல்லா பகுதிகளாக மாற்ற முனைந்துள்ளது. தூய்மை இந்தியா 2.0 திட்டம் தனது இலக்கில் 50 சதவீதத்தை அடைந்தாலும் இது நகர்புற இந்தியாவை மாற்றியமைக்கும்.
  Published by:Karthick S
  First published:

  Tags: Modi

  அடுத்த செய்தி