முகப்பு /செய்தி /இந்தியா / போபால் விஷவாயு கசிவு விபத்து இழப்பீடு வழக்கு... மத்திய அரசின் மறுசீராய்வு மனு தள்ளுபடி!

போபால் விஷவாயு கசிவு விபத்து இழப்பீடு வழக்கு... மத்திய அரசின் மறுசீராய்வு மனு தள்ளுபடி!

உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்

விஷவாயு விவகாரத்தை மீண்டும் கிளப்பினால் அது பாதிக்கப்பட்டவர்களுக்கே சிக்கலாக அமைந்துவிடும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

போபால் விஷவாயு கசிவு விபத்தில் பாதிக்கப்பட்டோருக்குக் கூடுதல் இழப்பீடு வழங்கக் கோரிய மத்திய அரசின் மறுசீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 1984ஆம் ஆண்டு மத்திய பிரதேச மாநிலம் போபாலில் செயல்பட்டு வந்த யூனியன் கார்பைடு நிறுவனத்தில் விஷவாயு கசிந்து 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

உலகை உலுக்கிய இந்த சம்பவத்தில் அந்நிறுவனத்திடம் இருந்து 750 கோடி ரூபாய் இழப்பீடு பெறப்பட்ட நிலையில், கூடுதலாக 7 அயிரத்து 844 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரி, மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுத் தாக்கல் செய்தது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், போபால் விஷவாயு கசிவு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 6 மடங்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும், விஷவாயு விவகாரத்தை மீண்டும் கிளப்பினால் அது பாதிக்கப்பட்டவர்களுக்கே சிக்கலாக அமைந்துவிடும் எனவும் தெரிவித்தது.

இதையும் படிங்க: அலுமினியத்தில் வந்தே பாரத் ரயில்கள்.. புதிய திட்டத்திற்கு மாறும் ரயில்வே... காரணம் இதுதான்..!

தொடர்ந்து, ரிசர்வ் வங்கியிடம் மீதமுள்ள 50 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகையைப் பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்திய நீதிமன்றம், கூடுதல் இழப்பீடு வழங்க யூனியன் கார்பைடு நிறுவனத்துக்கு உத்தரவிடக் கோரிய மத்திய அரசின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

First published:

Tags: Bhopal, Supreme court