புதுச்சேரி 3 பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் நியமனம் செல்லும் - உச்ச நீதிமன்றம்

Web Desk | news18
Updated: December 6, 2018, 11:03 AM IST
புதுச்சேரி 3 பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் நியமனம் செல்லும் - உச்ச நீதிமன்றம்
உச்சநீதிமன்றம்
Web Desk | news18
Updated: December 6, 2018, 11:03 AM IST
புதுச்சேரி சட்டப்பேரவைக்கு 3 பா.ஜ.க எம்.எல்.ஏ.க்களை குடியரசுத் தலைவர் நியமித்தது செல்லும் என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

புதுச்சேரி சட்டப்பேரவைக்கு பாஜக நிர்வாகிகள் சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகிய மூவரை எம்.எல்.ஏ.க்களாக மத்திய அரசின் பரிந்துரையின் பெயரில் குடியரசுத் தலைவர் நியமித்தார்.

எனினும், இதனை ஏற்காத புதுச்சேரி அரசு அவர்கள் மூவரை சட்டப்பேரவைக்குள் அனுமதிக்கவில்லை. நியமனத்துக்கு எதிராக மூன்று வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டது.

இந்த வழக்குகளில் தீர்ப்பு வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம், 3 பேர் நியமனம் செல்லும் என்று கூறியது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ லட்சுமி நாராயணன் மேல்முறையீடு செய்தார்.

இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சட்டப்பேரவைக்குள் மூவரையும் அனுமதிக்க வேண்டும் என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில், மூன்று பேர் எம்.எல்.ஏ.வாக நியமிக்கப்பட்டது செல்லும் என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

Also See..
Loading...
First published: December 6, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...