முகப்பு /செய்தி /இந்தியா / கியான்வாபி மசூதி வழக்கை அனுபவம் வாய்ந்த நீதிபதி ஒருவர் விசாரிக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு

கியான்வாபி மசூதி வழக்கை அனுபவம் வாய்ந்த நீதிபதி ஒருவர் விசாரிக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு

கோப்புப் படம்

கோப்புப் படம்

சமூகங்களுக்கு மத்தியில் சகோதரத்துவம் மற்றும் அமைதி நிலவ வைப்பதே எங்கள் பிரதான நோக்கம் எனக் கூறிய நீதிமன்றம், இந்த வழக்கு தொடர்பான ஆய்வு விஷயங்கள் ஊடகங்களில் கசியவிடப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி விஸ்வநாதர் ஆலயம் அருகே உள்ள கியான்வாபி மசூதியில் இந்து கோயில் உள்ளதாகவும் இது தொடர்பாக கள ஆய்வு செய்ய வேண்டும் என இந்து அமைப்பு வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதன்படி, மாவட்ட நிர்வாகம் சார்பில் கள ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த கள ஆய்வின் போது மசூதியின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் உள்ள குளத்தில் சிவலிங்கம் இருந்ததாக ஆய்வின் தகவல் கசிய இது பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பந்தப்பட்ட இடத்தை சீல் வைத்து மூட மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. அதேவேளை, அந்த மசூதியில் இஸ்லாமியர்கள் வழக்கம் போல் தொழுகை நடத்த எந்த தடையும் விதிக்கப்படவில்லை.

இந்த கள ஆய்வை நிறுத்த வேண்டும் என அந்த மசூதி கமிட்டி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சந்தரசூட், சூர்ய காந்த், பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் அமர்வு இன்று விசாரித்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தின் சிக்கலை கருத்தில் கொண்டும், உணர்வுகள் சம்பந்தப்பட்ட இந்த வழக்கை உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த அனுபவம் வாய்ந்த நீதிபதி ஒருவர் விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. சமூகங்களுக்கு மத்தியில் சகோதரத்துவம் மற்றும் அமைதி நிலவ வைப்பதே எங்கள் பிரதான நோக்கம் எனக் கூறிய நீதிமன்றம், இந்த வழக்கு தொடர்பான ஆய்வு விஷயங்கள் ஊடகங்களில் கசியவிடப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க: விசா முறைகேடு வழக்கில் கைது நடவடிக்கையை தடுக்க முன் ஜாமின் கோரும் கார்த்தி சிதம்பரம்.. 

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி, இந்த வழக்கை உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியைச் சேர்ந்த அனுபவம் வாய்ந்த மூத்த நீதிபதி விசாரிக்க உள்ளார். இந்த வழக்கு தொடர்பான ஆய்வு தகவல் கசிந்த நிலையில், ஆய்வை தலைமை தாங்கிய பணி நீக்கம் செய்யப்பட்டார். ஆய்வின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வாரணாசி நீதிமன்றத்தில் நேற்று சமர்ப்பிக்கப்பட்டது. இஸ்லாமியர்கள் தொழுகைக்கு முன் கை, கால்களை தூய்மை செய்யும் இடமான இல் இந்த குளம் உள்ளதால் அப்பகுதி தற்போது நீதிமன்ற உத்தரவின்படி சீல் வைக்கப்பட்டுள்ளது. தற்போது தொழுகைக்கு வருபவர்கள் தூய்மை செய்ய வேறு இடம் மசூதி நிர்வாகம் சார்பில் ஒதுக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Hindu Muslim issues, Supreme court, Varanasi