ஆந்திர முதல்வர் ஜெகன் மோகனை பதவி நீக்கம் செய்ய கோரிய வழக்கு -இன்று உச்ச நீதிமன்றம் விசாரணை

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகனை பதவி நீக்கம் செய்ய கோரிய வழக்கு -இன்று உச்ச நீதிமன்றம் விசாரணை

ஜெகன் மோகன் ரெட்டி

ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை முதல்வர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று தொடரப்பட்ட பொதுநல வழக்கை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.

 • Share this:
  எஸ்.ஏ.போப்தே ஓய்வுக்குப் பின்பு இந்தியாவின் அடுத்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருப்பவர் என்.வி. ரமணா. அவர் மீது குற்றம்சாட்டி ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டேவுக்கு கடந்த அக்டோபர் 6-ம் தேதி கடிதம் எழுதியிருந்தார். ஜெகன்மோகன் ரெட்டி எழுதியுள்ள கடிதத்தில் ஆந்திர உயர் நீதிமன்றத்தில் சில நீதிபதிகள் எந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்பதில் என்.வி.ரமணாவின் தலையீடு இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

  என்.வி, ரமணாவுக்கு ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும், அமராவதி ஆந்திராவின் புதிய தலைநகராக அறிவிக்கப்படும் முன்பு அங்கு ரமணாவின் மகள்களின் சில நில ஒப்பந்தங்கள் தொடர்பாக மாநில லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்ததாகவும் எட்டு பக்க கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

  ஒரு மாநில முதல்வர், உச்ச நீதிமன்ற நீதிபதி மீது குற்றம்சாட்டி கடிதம் எழுதுவது இதுவே முதல்முறை. இந்த கடிதம் ஊடகங்களிலும் வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதனையடுத்து, வழக்கறிஞர்கள் ஜி.எஸ்.மணி, பிரதீப் குமார் யாதவ், எஸ்.கே.சிங் ஆகியோர், ‘முதல்வர் பொறுப்பிலிருந்து ஜெகன்மோகன் ரெட்டியை நீக்கவேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அந்த மனுவில், ‘பண மோசடி, ஊழல் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் ஜெகன் மோகன் மீது உள்ளன. அந்த குற்ற வழக்குகள் அனைத்தும் தீவிரமானவை. எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் இந்தியாவின் இரண்டாவது மூத்த நீதிபதி குறித்து கடிதம் எழுதியதற்காக ஜெகன் மோகனை முதல்வர் பொறுப்பிலிந்து நீக்க வேண்டும். தனிப்பட்ட நலனுக்காக தன்னுடைய பதவியை தவறாக பயன்படுத்தி நீதிமன்றத்தை இழிவுபடுத்தியுள்ளார்.

  அவர், வெளிப்படையாக பொய்யாக அவதூறுகளைப் பரப்பியுள்ளார். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அல்லது முன்னாள் நீதிபதிகளைக் கொண்டு விசாரணை ஆணையம் அமைக்கவேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளது.
  Published by:Karthick S
  First published: