SC TO HEAR BAIL PLEA OF ARNAB GOSWAMI IN ABETMENT TO SUICIDE CASE VIN
அர்னாப் கோஸ்வாமி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது இன்று விசாரணை..
அர்னாப் கோஸ்வாமி
அர்னாப் தாக்கல் செய்த இடைக்கால ஜாமீன் மனுவை மும்பை உயர்நீதிமன்றம் திங்கள் கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து மும்பை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அர்னாப் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.
இடைக்கால ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த மும்பை உயர்நீதமன்ற உத்தரவை எதிர்த்து அர்னாப் கோஸ்வாமி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது இன்று விசாரணை நடைபெற உள்ளது.
கடந்த 2018-ஆம் ஆண்டு மஹாராஷ்ட்ராவை சேர்ந்த கட்டட வடிவமைப்பாளரை தற்கொலைக்கு தூண்டியதாக தனியார் தொலைக்காட்சி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த 4-ஆம் தேதி அர்னாப் கைது செய்யப்பட்டார். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் தற்போது 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் உள்ளார்.
இந்நிலையில் அர்னாப் தாக்கல் செய்த இடைக்கால ஜாமீன் மனுவை மும்பை உயர்நீதிமன்றம் திங்கள் கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து மும்பை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அர்னாப் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.