அயோத்தி சர்ச்சைக்குரிய நில விவகாரத்தில் இன்று முதல் நாள்தோறும் விசாரணை!

உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி இருந்த சர்ச்சைக்குரிய இடம் தொடர்பாக சன்னி வக்ஃபு வாரியம், நிர்மோஹி அகாரா மற்றும் ராம் லல்லா அமைப்புகள் வழக்கு தொடர்ந்தன.

news18
Updated: August 6, 2019, 11:33 AM IST
அயோத்தி சர்ச்சைக்குரிய நில விவகாரத்தில் இன்று முதல் நாள்தோறும் விசாரணை!
உச்ச நீதிமன்றம்
news18
Updated: August 6, 2019, 11:33 AM IST
அயோத்தியில் சர்ச்சைக்குரிய நில விவகாரம் தொர்பான வழக்கை, உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று முதல் நாள்தோறும் விசாரிக்க உள்ளது.

உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி இருந்த சர்ச்சைக்குரிய இடம் தொடர்பாக சன்னி வக்ஃபு வாரியம், நிர்மோஹி அகாரா மற்றும் ராம் லல்லா அமைப்புகள் வழக்கு தொடர்ந்தன.

இதை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம் 3 அமைப்புகளும் நிலத்தை பகிர்ந்துகொள்ள 2010-ம் ஆண்டு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.


இதையடுத்து, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அடங்கிய அரசியல் சாசன அமர்பு முன்பு விசாரணை நடைபெற்றது. பின்னர், கடந்த மார்ச் மாதம் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிஃபுல்லா தலைமையில் மத்தியஸ்தர் குழு நியமிக்கப்பட்டது.

இக்குழு கடந்த வாரம் தனது அறிக்கையை தாக்கல் செய்தது. ஆனால், சமரச முயற்சி தோல்வியில் முடிந்ததால் இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.

எனவே, மேல்முறையீடடு மனுக்கள் மீதான விசாரணையை இன்று தொடங்குவதாக உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தெரிவித்தது.

Loading...

இதையடுத்து, அயோத்தி சர்ச்சைக்குரிய நில விவகாரம் தொடர்பாக, இன்று முதல் நாள்தோறும் விசாரணை நடைபெறவுள்ளது.

Also see...

First published: August 6, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...