ஹோம் /நியூஸ் /இந்தியா /

மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்பான வழக்கு: பேராசிரியர் சாய்பாபாவின் விடுதலைக்கு உச்சநீதிமன்றம் தடை!

மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்பான வழக்கு: பேராசிரியர் சாய்பாபாவின் விடுதலைக்கு உச்சநீதிமன்றம் தடை!

சாய்பாபா

சாய்பாபா

இவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்ததை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த மும்பை உயர்நீதிமன்ற நாக்பூர் பெஞ்ச் சாய்பாபாவை விடுதலை செய்ய உத்தரவிட்டது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai |

  மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்பு வைத்து இருந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் மாற்றுத் திறனாளி பேராசிரியர் சாய்பாபாவின் விடுதலைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

  டெல்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்த சாய்பாபாவுக்கு, மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்பு இருந்ததாகக் கூறி 2014- ஆம் ஆண்டு உபா சட்டத்தில் கைது செய்யப்பட்டார். மாவோயிஸ்ட்டுகளின் தலைவர்களில் ஒருவரான முப்பல்ல லட்சுமண ராவுடன் நெருங்கிய தொடர்பு இருந்ததாக சாய்பாபா மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

  இவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இதை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த மும்பை உயர்நீதிமன்ற நாக்பூர் பெஞ்ச் சாய்பாபாவை விடுதலை செய்ய உத்தரவிட்டது.

  உலகளாவிய பட்டினி குறியீட்டில் இலங்கை, பாகிஸ்தானை விட மோசமான இடத்தில் பின்தங்கியுள்ள இந்தியா

  இதை எதிர்த்து மகாராஷ்டிரா அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தது. பேராசிரியர் சாய்பாபா உள்ளிட்டோர் விடுதலை உத்தரவுக்குத் தடை விதிக்க வெள்ளிக்கிழமை உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து இருந்தது.

  உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்படி மேல்முறையீட்டு மனுவாக மகாராஷ்டிர அரசு தாக்கல் செய்தது. அந்த வழக்கின் விசாரணை சனிக்கிழமை நடைபெற்றது. அதில் மாற்றுத்திறனாளி பேராசிரியர் உள்ளிட்ட 5 பேரை விடுவிக்கும் மும்பை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.

  Published by:Ilakkiya GP
  First published:

  Tags: Maoist, Saibaba, Supreme court