’கடவுள் ஜெகன்நாதர் எங்களை மன்னிக்க மாட்டார்...’ உலகப் புகழ் பெற்ற ரத யாத்திரைக்கு உச்ச நீதிமன்றம் தடை

உலகப் புகழ்பெற்ற புரி ஜெகன்நாதர் ஆலைய ரத யாத்திரைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது

’கடவுள் ஜெகன்நாதர் எங்களை மன்னிக்க மாட்டார்...’ உலகப் புகழ் பெற்ற ரத யாத்திரைக்கு உச்ச நீதிமன்றம் தடை
ரத யாத்திரை (கோப்புப்படம்)
  • Share this:
ஒடிசா மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற புரி ஜெகன்நாதர் ஆலயத்தின் ரத யாத்திரை நிகழ்ச்சி உலகம் முழுவதும் பிரபலமானது ஆகும். ஆண்டுதோறும் நடக்கும் ரத யாத்திரை நிகழ்ச்சியில் லட்சக் கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள். இந்த ஆண்டுக்கான ரத யாத்திரை நிகழ்ச்சி வரும் ஜூன் 23-ம் தேதி நடைபெற இருந்தது.

கொரோனா பரவல் காரணமாக, ரத யாத்திரையை தள்ளி வைக்க வேண்டும் என ஒடிஷா விகாஸ் பரிஷத் என்ற தொண்டு நிறுவனத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.





படிக்கஇந்தியாவில் ₹ 10 விலையில் கொரோனா உயிர் காக்கும் மருந்து


படிக்கஇந்தியா - சீனா முப்படைகளின் பலம் என்ன..? ஓர் ஒப்பீடு









லட்சக்கணக்கான பக்தர்கள் கூடும் இந்த யாத்திரை விழாவை தற்போது நடத்தினால் ஏராளமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது என அந்த தொண்டு நிறுவனம் அளித்த மனுவில் கூறப்பட்டிருந்தது. எனவே இதனை கருத்தில் கொண்டு இந்த யாத்திரையை ஒத்திவைக்க மாநில அரசுக்கு உத்தரவிட கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு ஜெகநாதர் ஆலய ரத யாத்திரைக்கு தடை விதித்தது உத்தரவிட்டுள்ளது. “இந்த யாத்திரையை நடத்த அனுமதித்தால் கடவுள் ஜெகன்நாதர் நம்மை மன்னிக்கமாட்டார். தற்போதைய கொரோனா சூழலில் ஏராளமான மக்கள் கூடுவதை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. மக்களின் நலன் கருதி இந்த ரத யாத்திரைக்கு தடை விதிக்கப்படுகிறது” என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
First published: June 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading