அயோத்தி வழக்கு: இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய சமரசக் குழுவுக்கு உத்தரவு

தீர்வு காண முடியவில்லை என மத்தியஸ்தர் குழு கூறினால் 25-ம் தேதி முதல் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

Web Desk | news18
Updated: July 11, 2019, 8:41 PM IST
அயோத்தி வழக்கு: இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய சமரசக் குழுவுக்கு உத்தரவு
உச்சநீதிமன்றம்
Web Desk | news18
Updated: July 11, 2019, 8:41 PM IST
அயோத்தி வழக்கில் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய சமரசக் குழுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பாக சுமுக தீர்வு காண்பதற்காக நீதிபதி கலிபுல்லா தலைமையில் 3 பேர் கொண்ட மத்தியஸ்தர் குழுவை நியமனம் செய்த உச்சநீதிமன்றம், ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் தீர்வு காணும் படி அவகாசம் அளித்திருந்தது.

இந்நிலையில், மத்தியஸ்தர் குழுவிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகும் அயோத்தி வழக்கில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும் இவ்வழக்கை அவசர வழக்காக ஏற்று விசாரிக்க வேண்டும் என்றும் கோரி கோபால் சிங் மற்றும் இந்து அமைப்புகள் மனு தாக்கல் செய்தன.


அதில், சமரசக் குழு சரியாக செயல்படவில்லை என்றும் அயோத்தி வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டுமென்றும் வலியுறுத்தப்பட்டது.

இந்த வழக்கை இன்று விசாரித்த அரசியல் சாசன அமர்வு, அயோத்தி வழக்கின் இடைக்கால அறிக்கையை வருகிற      18-ம் தேதி தாக்கல் செய்யுமாறு சமரசக் குழுவுக்கு உத்தரவிட்டு விசாரணையை 25-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

தீர்வு காண முடியவில்லை என மத்தியஸ்தர் குழு கூறினால் 25-ம் தேதி முதல் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

Loading...

Also watch: ரத்தத்துக்கு ரத்தம்... பழிக்குப் பழி... என மதுரையில் ஒரு கொடூரக் கொலை...!

First published: July 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...