கொரோனா சிகிச்சை கட்டணத்தை நிர்ணயிக்கக் கோரிய வழக்கு... ஒரு வாரத்திற்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவு

கொரோனா சிகிச்சை கட்டணத்தை நிர்ணயிக்கக் கோரிய வழக்கு... ஒரு வாரத்திற்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவு
உச்ச நீதிமன்றம்
  • Share this:
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணத்தை நிர்ணயிக்கக் கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா சிகிச்சைக்காக தனியார் மருத்துத்துவமனைகள் பல லட்ச ரூபாய் வசூலித்து வருவதாகவும் அபிஷேக் கோயங்கா என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிப்பதால் நடுத்தர மக்கள் தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்ல முடியவில்லை. அரசு மருத்துவமனைகளிலும் படுக்கை இல்லாத நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது.


எனவே, தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்காக அதிக பட்சமாக எவ்வளவு கட்டணம் வசூலிக்கலாம் என்பதை நிர்ணயிக்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று நீதிபதி அஷோக் பூஷன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கின் நகலை சொலிசிட்டர் ஜெனரலுக்கு வழங்கும்படியும், மத்திய அரசு இது குறித்து பதிலளிக்கக் கூறி வழக்கை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

Also read... ராயபுரம், தண்டையார்பேட்டையில் ஒரே நாளில் 300-க்கும் அதிகமாக தொற்று: அதிர்ச்சி தரும் சென்னை அப்டேட்!







Also see...
First published: June 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading