புலம்பெயர் தொழிலாளர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெற உச்சநீதிமன்றம் உத்தரவு

சொந்த ஊருக்கு திரும்பும்போது ஊரடங்கு விதிகளை மீறியதாக, புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

புலம்பெயர் தொழிலாளர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெற உச்சநீதிமன்றம் உத்தரவு
மாதிரி படம். (Reuters)
  • Share this:
லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு நடந்து செல்வது குறித்து உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது.

இதுகுறித்து மத்திய மாநில அரசுகளின் வாதங்களை கேட்டறிந்த நீதிபதி அசோக்பூஷன் தலைமையிலான அமர்வு, புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்ப ரயில்வேண்டும் என மாநிலங்கள் கோரிக்கை விடுத்தால் 24 மணி நேரத்தில் ரயில்வேத்துறை ஏற்பாடு செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

புலம்பெயர் தொழிலாளர்களுக்கான வேலை வாய்ப்பு திட்டங்களைத் தயாரித்து ஒரு மாதத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், சொந்த மாநிலத்திற்கு திரும்ப விரும்பும் தொழிலாளர்களை அடையாளம் கண்டு, அவர்களை 15 நாட்களுக்குள் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என அறிவுறுத்தியது. சொந்த ஊர் திரும்பும்போது ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக புலம்பெயர் தொழிலாளர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்யவேண்டும் என்று உத்தரவிட்டது. இதையடுத்து வழக்கு ஜூலை 8ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


Also read... ஊக்க மருந்து புகார் - தமிழகத்தைச் சேர்ந்த கோமதியின் தங்கப் பதக்கம் பறிப்பு; 4 ஆண்டுகள் தடை

Also see...
First published: June 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading