• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • ரத்து செய்த சட்டத்தின் கீழ் போலீசார் பதியும் வழக்குகள்; உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி

ரத்து செய்த சட்டத்தின் கீழ் போலீசார் பதியும் வழக்குகள்; உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி

உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்

ரத்தான சட்டங்களின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்வதைக் கண்டு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

  • Share this:
    தகவல் தொழில்நுட்பச் சட்டம், பிரிவு 66ஏ 2015-ம் ஆண்டே ரத்து செய்யப்பட்டு விட்டது. ஆனால் போலீசாருக்கு இன்னும் அந்தச் சட்டம் இருக்கிறது போலும், எப்படி ரத்தான சட்டத்தின் கீழ் எப்.ஐ.ஆர் பதிவு செய்ய முடியும்? என்று காவல்துறையை உச்ச நீதிமன்றம் கடுமையாகச் சாடியுள்ளது.

    இது தொடர்பாக மக்கள் சிவில் உரிமைக் கழகம் உச்ச நீதிமன்றத்தில் மனு மேற்கொண்டது. அதில் ரத்து செய்யப்பட்ட தகவல் தொழில் நுட்பச் சட்டப்பிரிவு 66-ஏ-யின் கீழ் போலீசார் பதிவு செய்த வழக்குகளை, பதிந்த எப்.ஐ.ஆர்.களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

    இந்த மனுவின் மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்ற நீதிபதி ரோஹிண்டன் ஃபாலி நாரிமன், தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர், “என்ன நடந்து கொண்டிருக்கிறதோ அது பயங்கரம். ஏன் இப்படி நடக்கிறது?” என்று கவலை வெளியிட்டார்.

    மக்கள் சிவில் உரிமைக் கழகம் சார்பாக வாதாடிய வழக்கறிஞர் சஞ்சய் பாரிக், இந்த ரத்து செய்த சட்டப்பிரிவின் கீழ் கேஸ்கள் அதிகரித்திருக்கிறது என்பதை ஆதாரங்களுடன் கோர்ட்டில் சமர்ப்பித்தார்.

    இதனை புரிந்து கொண்ட உச்ச நீதிமன்றம், “ஆம்! ஆம்! நாங்கள் நிச்சயம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புகிறோம்” என்றது.

    வழக்கறிஞர் பாரிக் கூறும்போது, “ஏதாவது முறை வேண்டாமா? ரத்து செய்த சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்வதால் மக்கள் எப்படி கஷ்டப்படுகின்றனர் தெரியுமா?” என்றார்.

    ஆனால் அரசுக்காக வாதாடிய அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், ‘ஐடி சட்டம் 66-ஏ பிரிவு ரத்து செய்யப்பட்டாலும் அது இன்னமும் உள்ளது.

    இதற்கு பதிலளித்த நீதிபதிகள், “இது மிகவும் அதிர்ச்சிகரமானது, இதனை எதிர்த்து பதிவு செய்யுங்கள்” என்றார். மேலும் வழக்கை 2 வாரங்களுக்கு தள்ளி வைத்தார். மேலும் இது தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ரத்து செய்யப்பட்ட 66-ஏ பிரிவு சோஷியல் மீடியா எனப்படும் சமூக ஊடகங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிடக் கூடாது. அப்படி வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் பிரிவாகும் இது.

    2015-ல் உச்ச நீதிமன்றம் சட்டப்பிரிவை ரத்து செய்ததன் பின்னணி:

     

    கடந்த 2012ஆம் ஆண்டில் சிவசேனா கட்சித் தலைவர் பால் தாக்ரே மறைவுக்கு மும்பையில் பந்த் கடைபிடிக்கப்பட்டது. இது குறித்து தானே மாவட்டத்தைச் சேர்ந்த ஷாகின் தாடா, ரேனு ஸ்ரீனிவாசன் ஆகிய இரு பெண்களும் சமூக வலைத்தளத்தில் கருத்துத் தெரிவித்தனர். இந்த கருத்தையடுத்து, தகவல் தொழில்நுட்பச் சட்டம் 66ஏ பிரிவில் ஷாகின் தாடா, ரேணு ஸ்ரீனிவாசன் இருவரையும் மும்பை போலீஸார் கைது செய்தனர்.

    இந்த கைதை எதிர்த்தும், தகவல் தொழில்நுட்பச்சட்டத்தில் திருத்தம் செய்யக் கோரியும் சட்டக்கல்லூரி மாணவரி ஸ்ரேயா சிங்கால் உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்குத் தொடர்ந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த  உச்ச நீதிமன்றம், அடிப்படை உரிமைகளுக்கு விரோதமாக சட்டப்பரிவு இருப்பதாகக் கூறி ஐடி சட்டத்தில் 66-ஏ பிரிவை ரத்து செய்து 2015ம் ஆண்டு மார்ச் 24-ம் தேதி தீர்ப்பளித்தது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: