முகப்பு /செய்தி /இந்தியா / அக்டோபர் 5-ம் தேதி விஜய் மல்லையா ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு

அக்டோபர் 5-ம் தேதி விஜய் மல்லையா ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு

விஜய் மல்லையா

விஜய் மல்லையா

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக, தொழிலதிபர் விஜய் மல்லையா அக்டோபர் 5ம் தேதிக்குள் ஆஜராக வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

9,000 கோடி ரூபாய்க்கும் மேல் கடன் வாங்கி மோசடி செய்தது தொடர்பாக, லண்டனுக்கு தப்பிச் சென்ற விஜய் மல்லையாவை கடந்த 2017 ஆம் ஆண்டு, கர்நாடக உயர்நீதிமன்றம் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்திருந்தது.

இதற்கிடையே நீதிமன்ற உத்தரவை மீறி, சுமார் 300 கோடி ரூபாய் அளவுக்கு தன்னுடைய வாரிசுகளுக்கு விஜய் மல்லையா சொத்துகளை மாற்றியதை தொடர்ந்து அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

Also read... ஊரடங்கு விதிகளை மீறியதாக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் மீது வழக்குப்பதிவு

இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்யக்கோரி, உச்சநீதிமன்றத்தில் மல்லையா தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மனுவை விசாரித்த நீதிபதிகள் யு.யூ. லலித், அசோக் பூஷண் அமர்வு, மனுவை தள்ளுபடி செய்ததுடன், விஜய் மல்லையா அக்டோபர் 5ம் தேதி, மதியம் 2 மணிக்குள் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

அதற்கான உரிய ஏற்பாடுகளை மத்திய அரசு மற்றும் உள்துறை அமைச்சகம் மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியது.

First published:

Tags: Businessman Vijay Mallya, Supreme court