#Breaking | டிக் டாக் மீதான தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

உயர் நீதிமன்றக் கிளையின் தீர்ப்புக்கு எதிராக டிக் டாக் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தது.

news18
Updated: April 15, 2019, 12:18 PM IST
#Breaking | டிக் டாக் மீதான தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
டிக் டாக்
news18
Updated: April 15, 2019, 12:18 PM IST
டிக் டாக் மீது உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்த தடையை எதித்து அந்நிறுவனம் தொடர்ந்த இன்று வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தடையை நீக்க மறுத்துள்ளது.

டிக் டாக் செயலி கலாசார சீரழிவுக்கு காரணமாக இருப்பதாக கூறி மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் எஸ். முத்துக்குமார் தொடர்ந்த வழக்கில், “டிக் டாக் செயலிக்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும்” என்று மதுரை உயர் நீதிமன்றக் கிளை நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

படிக்க... துப்பாக்கியை வைத்து டிக்-டாக் வீடியோ... தவறுதலாக நண்பன் சுட்டதில் மாணவர் உயிரிழப்பு..!

மேலும், இது தொடர்பாக வரும் 16-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர். உயர் நீதிமன்றக் கிளையின் தீர்ப்புக்கு எதிராக டிக் டாக் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தது.

படிக்க... டிக் டாக் ஆப்பை தடை செய்ய 80% இளைஞர்கள் ஆதரவு!

இதனை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற கிளையின் தீர்ப்புக்கு தடை விதிக்க மறுத்தது. 22-ம் தேதி இந்த வழக்கு விசாரிக்கப்படும் என்றும் நீதிபதிகள் அறிவித்தனர்.

படிக்க... தடை விதிக்கும் அரசின் முடிவு... என்ன சொல்கிறது டிக் டாக்...!
Loading...

தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.





ஐ.பி.எல் தகவல்கள்









First published: April 15, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...