டிக்டாக் செயலியை தடை செய்ய கோரும் மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து உச்சநீதிமன்றத்திற்கு மாற்ற கோரிய டிக் டாக் நிறுவனத்தின் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
டிக்டாக் செயலியை பதிவிறக்கம் செய்யவும் அதன் வீடியோக்களை ஊடகங்களில் ஒளிப்பரப்பவும் மத்திய அரசு தடைவிதிக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
மேலும் டிக்டாக் வீடியோ செயலிக்கு தடை விதிப்பது குறித்து, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய செயலாளர், மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன் அடிப்படையில் மத்திய அரசும் கூகுள் நிறுவனுத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி டிக்டாக் செயலிக்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
இதனை எதிர்த்து டிக்டாக் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது. அந்த மனுவில் தங்களிடம் எந்த கருத்தும் கேட்காமலேயே டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த
நிலையில், நீதிபதிகள் இந்த டிக்டாக் வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து மாற்ற முடியாது என்று தெரிவித்தனர்.
மேலும் இந்த வழக்கில் பலதரப்பட்ட விசாரணைகள் செய்ய வேண்டியுள்ளது. அதனால் சென்னை உயர் நீதிமன்றமே தகுந்த முறையில் விசாரிக்கும் எனக் கூறி மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.
மேலும் படிக்க... காதல் மனைவியை விட்டுவிட்டு திருநங்கையுடன் குடித்தனம்: டிக்டாக் வீடியோவால் சிக்கிய நபர்
அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.