• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • மதுவை ஆன்லைனில் விற்பது, டோர் டெலிவரி செய்வது பற்றி பரிசீலிக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம்

மதுவை ஆன்லைனில் விற்பது, டோர் டெலிவரி செய்வது பற்றி பரிசீலிக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம்

ஊரடங்கு காரணமாக 40 நாட்களுக்கு பிறகு மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் மதுவாங்க அதிகளவிலான கூட்டம் கூடியது.

  • Share this:
    மதுபான கடைகளில் அதிக கூட்டம் கூடுவதால் மதுவை ஆன்லைனில் விற்பனை அல்லது டோர் டெலிவரி செய்வது குறித்து மாநிலங்கள் பரிசீலிக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட மாவட்டங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டது. கொரோனா வைரஸ் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளை தவிர மற்ற இடங்களில் மதுவிற்பனை நடைபெற்று வருகிறது.

    ஊரடங்கு காரணமாக 40 நாட்களுக்கு பிறகு மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் மதுவாங்க அதிகளவிலான கூட்டம் கூடியது. மதுக்கடைகள் திறப்பால் கொரோனா வைரஸ் பரவல் தீவரமாகும் என்றும் மதுக்கடைகளை திறக்கப்பட்டதற்கு எதிராக போராட்டங்களும் நடைபெறுகிறது.

    இதனிடையே கொரோனா தாக்கம் காரணமாக அனைத்து மாநிலங்களிலும் மதுவிற்பனையை தடைசெய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், “மது விற்பனையை தடை செய்ய உத்தரவு பிறப்பிக்க மறுத்து விட்டது. மேலும் மதுவை ஆன்லைனில் விற்பனை அல்லது டோர் டெலிவரி செய்வது குறித்து மாநிலங்கள் பரசீலிக்க வேண்டும்“ என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.













    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: