Covid Vaccine: தடுப்பூசிக்கு ஒதுக்கப்பட்ட 35 ஆயிரம் கோடி செலவிடப்பட்டதன் விவரம் என்ன? மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி!

உச்ச நீதிமன்றம்

மத்திய அரசு தடுப்பூசி கொள்முதல் செய்த அனைத்து தகவல்களையும் பிரமாணப்பத்திரமாக தாக்கல் செய்யவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    தடுப்பூசி திட்டத்துக்கு 35 ,000 கோடி ரூபாய் எப்படி செலவிடப்பட்டுள்ளது என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

    தடுப்பூசிகள் தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை பதிவு செய்தது. இந்த வழக்கு நீதிபதிகள் சந்தரசூட் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது உரிய கொள்கையை வகுக்காமல் தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்படுவதாக மத்திய அரசை நீதிபதிகள் கடுமையாக விமர்சித்தனர்.

    மேலும் மாறுபட்ட விலை நிர்ணயத்தால் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஒரே சீரான தடுப்பூசி கிடைக்கவில்லை என்றும் நீதிபதிகள் கூறினர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து மாநில அரசுகள் தடுப்பூசி நேரடியாக வாங்கமுடியுமா?என்று கேட்ட நீதிபதிகள், அவ்வாறு பெறுவதில் சிக்கல் இருந்தால் தடுப்பூசி கொள்கையை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

    மேலும் இந்தாண்டின் இறுதி வரை வழங்கப்பட உள்ள தடுப்பூசி விவரங்களை அளிக்கவும், 3-வது கொரோனா அலை வந்தால் குழந்தைகளை காக்க தடுப்பூசி திட்டம் மற்றும் மருத்துவ கட்டமைப்பு குறித்த விவரங்களை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

    முதல் 3 கட்டங்களில் தடுப்பூசி எடுத்துக் கொள்ளாத மக்களுக்கு மத்திய அரசு எப்போது, எப்படி தடுப்பூசி போடப்போகிறது என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதுகுறித்து விரிவான பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர்.

    தடுப்பூசி கொள்கை, கொள்முதல், விநியோகம் குறித்த விவரங்களையும், வயதுவாரியாக எப்போது தடுப்பூசி போடப்படும் என்று கேட்டுள்ள உச்சநீதிமன்றம், தடுப்பூசி கையிருப்பு விவரத்தையும் மத்திய அரசு அளிக்க உத்தரவிட்டுள்ளது.

    35,000 கோடி ரூபாய் நிதியிலிருந்து ஏன் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கவில்லை என்று சாடிய நீதிமன்றம் தடுப்பூசி ஆய்வுக்கு மத்திய அரசு நிதியளித்துள்ள நிலையில், மாநிலங்கள் மற்றும் தனியாருக்கு மருந்து நிறுவனங்கள் விலை நிர்ணயித்தது எப்படி என்றும் நீதிமன்றம் கேட்டுள்ளது.

    Also read... கொரோனாவினால் இறந்ததால் ஆத்திரத்தில் மருத்துவரை தாக்கிய உறவினர்கள்- IMA கடும் கண்டனம்

    இதுவரை மத்திய அரசு தடுப்பூசி கொள்முதல் செய்த அனைத்து தகவல்களையும் பிரமாணப்பத்திரமாக தாக்கல் செய்யவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published: