ஹோம் /நியூஸ் /இந்தியா /

75 ஆண்டு சுதந்திர இந்தியாவில் ஏன் பெண் தலைமை தேர்தல் ஆணையரே இல்லை? - உச்சநீதிமன்றம் கேள்வி

75 ஆண்டு சுதந்திர இந்தியாவில் ஏன் பெண் தலைமை தேர்தல் ஆணையரே இல்லை? - உச்சநீதிமன்றம் கேள்வி

உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்

CEC மற்றும் EC நியமனங்களை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டத்தை பாராளுமன்றம் இன்னும் கொண்டு வராத நிலையில் அதற்கு முன்பு அதை சீரமைக்கவும் நெறிமுறை படுத்தும் சில விதிமுறைகளை உச்சநீதிமன்றம் கொடுக்கலாம்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Delhi, India

நீதிபதிகளை நியமிக்கும் முறை குறித்து சமீப காலத்தில் பல விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. அதுபோல இந்திய தலைமை தேர்தல் ஆணையர் (CEC) மற்றும் தேர்தல் ஆணையர்களை (EC) சுதந்திரமான முறையில் தேர்வு செய்ய உத்தரவிடக் கோரிய நான்கு பொதுநல வழக்குகள் உச்சநீதிமன்ற நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது.

இந்திய தேர்தல் ஆணையம்:

தற்போது, இந்திய தேர்தல் ஆணையம் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பாக இயங்கி வருகிறது. இதில் ஒரு தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் இரண்டு தேர்தல் அதிகாரிகள் உள்ளனர். அரசியலமைப்பின் 324(2) பிரிவின் கீழ், இவர்களை  நியமிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது. பிரதமர் மற்றும் அமைச்சர்கள் குழுவின் உதவி மற்றும் ஆலோசனையின் பேரில் செயல்படும் ஜனாதிபதி, "பாராளுமன்றத்தால் உருவாக்கப்பட்ட எந்தவொரு சட்டத்தின் விதிகளுக்கும் உட்பட்டு" நியமனங்களைச் செய்வார்.

இருப்பினும், இன்றுவரை அத்தகைய சட்டம் எதுவும் உருவாக்கப்படாத நிலையில்,  ஜனாதிபதியின் முத்திரையின் கீழ் பிரதமர் மற்றும் அமைச்சர்கள் குழுவால் தான் இந்த நியமனங்கள் நடக்கிறது. அத்தகைய நியமனங்களுக்கான விதிகளும் ஒரு வேட்பாளரின் தகுதி மற்றும் தேர்ந்தெடுக்கும் முறை குறித்து அரசு தொடர்ந்து மௌனமாக உள்ளன.

நீதிபதி கே.எம். ஜோஸ்பே தலைமையிலான அஜய் ரஸ்தோகி, அனிருத்தா போஸ், ஹிருஷிகேஷ் ராய் மற்றும் சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரித்தது.

இதையும் படிங்க : அரசு வாகனத்துடன் இன்ஸ்டாகிராமில் கெத்து போஸ்ட்... ஐஏஎஸ் அதிகாரி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை

CEC மற்றும் பிற EC களை நியமிக்க, கொலீஜியம் அமைப்பு மூலம் தேர்வு செய்யும்போது, ​​​​தங்களுக்குத் தெரிந்த வேட்பாளர்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்று வாதிடப்பட்டது. அப்போது  தேர்தல் ஆணையர் நியமனத்தில் எந்த அளவுகோல் கொண்டு எந்த நடைமுறைகளைப் பின்பற்றுகிறீர்கள் என்று ஒன்றிய அரசை நீதிபதிகள் கேட்டனர். 

பெண் தலைமை தேர்தல் ஆணையரே இல்லையே?

மேலும், இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகியும் ஒரு பெண் தலைமை தேர்தல் ஆணையரை கூட தேர்வு செய்ய இயலவில்லையே ஏன்? என்று கேள்வி எழுப்பினர். தேர்தல் ஆணையத்திற்கு சுதந்திரமான மற்றும் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவதை போன்று பெண் ஆணையர்கள் நியமனமும் முக்கியமானது என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

இந்தியாவில் ஒரே பெண் தலைமை தேர்தல் ஆணையராக VS ரமாதேவி, 1990 இல் இரண்டு வாரங்களுக்கு மட்டும் பதவியில் இருந்தார். அதன் பின்னர் எந்த பெண்ணும் அந்த பதவிக்கு வரவில்லை.

இந்த முறையைப் பற்றி அரசாங்கம் மௌனமாக இருந்த நிலையில், பெஞ்ச் “எந்த பொறிமுறையும் இல்லை என்பது போல் தெரிகிறது, நீங்கள் உங்கள் சொந்த நடைமுறையைப் பின்பற்றுகிறீர்கள். அத்தகைய நியமனங்கள் பாராளுமன்றத்தால் செய்யப்படும் சட்ட விதிகளுக்கு எதிரானது என்று குறிப்பிட்டது.

இதையும் படிங்க : ஹனி ட்ராப்பில் சிக்கிய வெளியுறவுத் துறை ஊழியர்... பாகிஸ்தானுக்கு உளவு கூறியதாக கைது

CEC மற்றும் EC நியமனங்களை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டத்தை பாராளுமன்றம் இன்னும் கொண்டு வராத நிலையில் அதற்கு முன்பு அதை சீரமைக்கவும் நெறிமுறை படுத்தும் சில விதிமுறைகளை உச்சநீதிமன்றம் கொடுக்கலாம். அது இந்திய அரசியலமைப்பு சட்டப்படி செல்லும் என்றனர்.

மத்திய அரசின் சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணி, சட்டத்தில் "வெற்றிடம் இல்லை" எனவே, நீதித்துறையின் தலையீடு இதில் தேவையில்லை என்று கூறினார்.

மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் அனூப் சவுத்ரி மற்றும் கோபால் சங்கரநாராயணன் மற்றும் வழக்கறிஞர்கள் பிரசாந்த் பூஷன் மற்றும் காளீஸ்வரம் ராஜ் ஆகியோர் ஆஜராகி, தேர்தல் ஆணையத்தின் சுதந்திரத்தை முற்றிலும் நடுநிலையான தேர்வுக் குழுவை வைத்திருப்பதன் மூலம் மட்டுமே உறுதி செய்ய முடியும் என்று வாதிட்டனர்.

இந்த வழக்கை அடுத்த நவம்பர் 22ஆம் தேதி அரசியல் சாசன அமர்வு விசாரிக்கிறது.

Published by:Ilakkiya GP
First published:

Tags: Chief Election Commissioner, Election commission of India, Supreme court