டெல்லி கலவரம் பற்றி வீடியோ பதிவிட்ட மூத்த பத்திரிகையாளருக்கு எதிரான தேசத்துரோக வழக்கு தள்ளுபடி

பத்திரிகையாளர் விநோத் துவா

கடந்த ஆண்டு டெல்லியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக யூடியூபில் பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக் கருத்து தெரிவித்ததாக இமாச்சல பத்திரிகையாளர் விநோத் துவா மீது தொடரப்பட்ட தேசத் துரோக வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

 • Share this:
  கடந்த ஆண்டு டெல்லியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக யூடியூபில் பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக் கருத்து தெரிவித்ததாக இமாச்சல பத்திரிகையாளர் விநோத் துவா மீது தொடரப்பட்ட தேசத் துரோக வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

  அதாவது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்தால் அது பிரிவு 124ஏ-வில் உள்ள ஷரத்துக்களுடன் ஒத்துப் போவதாக இருக்க வேண்டும் என்று நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு கண்டிப்புடன் கூறி தேசத்துரோக வழக்கை தள்ளுபடி செய்தது.

  இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் கூறும்போது, “கேதார் நாத் சிங் வழக்கின் கீழ் ஒவ்வொரு பத்திரிகையாளருக்கும் பாதுகாப்புக்கு உரியவர்களே” என்று தெரிவித்துள்ளது.

  கேதார்நாத் சிங் வழக்கு (1962) என்பதில் தேசத்துரோக குற்றம்சாட்டப்பட்டவர்களின் செயல், பேச்சு வன்முறையைத் தூண்டுவதாகவோ, பொது அமைதிக்கு ஊறு விளைவிப்பதாகவோ இருப்பதாக நிரூபிக்கப் படவேண்டும்.

  விநோத் துவா தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை விசாரிக்க கமிட்டி அமைக்க வேண்டும் என்று வைத்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது, காரணம் கமிட்டி அமைப்பது சட்டமியற்றுபவர்களின் புலம் சார்ந்தது என்று கூறிவிட்டது. விநோத் துவா கூறும்போது, 10 ஆண்டுகள் அனுபவம் உள்ள பத்திரிகையாளர்கள் மீது எஃப்.ஐ.ஆர். போட வேண்டுமெனில் கமிட்டி அமைத்து விசாரிக்க வேண்டும் என்று கூறினார்.

  பாஜக தலைவர் ஷியாம் குமார் செய்ன் என்பவர் மே 6,2020-ல் சிம்லா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார், அதில் விநோத் துவா மீது தேசத்துரோகம், பொது அமைதிக்கு ஊறுவிளைவித்தல், அவதூறு வாசகங்கள் கொண்ட நோட்டீஸ்களை அச்சடித்து விநியோகிப்பது என்று இவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அதாவது விநோத் துவா, தன் யூடியூப் சேனலில் பிரதமர் நரேந்திர மோடி மீது கடும் குற்றச்சாட்டுகளை முன் வைத்தார், அதாவது வோட்டுக்காக தீவிரவாதத் தாக்குதல்களை பயன்படுத்துகிறார் என்று விநோத் துவா பேசியிருந்தார். இதனால்தான் இவர் மீது தேசத்துரோக வழக்கு போடப்பட்டுள்ளது.

  கடந்த வாரத்திலும் வேறொரு வழக்கில் உச்ச நீதிமன்றம், எது தேசத்துரோகம் என்பதை திட்டவட்டமாக விளக்க வேண்டும் என்று கோரியிருந்தது. இப்போது விநோத் துவா மீதான தேசத்துரோக வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
  Published by:Muthukumar
  First published: