• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • ஆடைக்கு மேல் தொட்டு பாலியல் சீண்டலில் ஈடுபடுவதும் போக்சோ சட்டத்தில் வரும்: உச்ச நீதிமன்றம்

ஆடைக்கு மேல் தொட்டு பாலியல் சீண்டலில் ஈடுபடுவதும் போக்சோ சட்டத்தில் வரும்: உச்ச நீதிமன்றம்

போக்சோ சட்டம்

போக்சோ சட்டம்

உடலும் உடலும் நேரடியாக தொடர்பில் இல்லாததால் குற்றம் போக்சோ சட்டத்தின் கீழ் தண்டனைக்குரியது அல்லது என்று மும்பை உயர் நீதிமன்ற  நீதிபதி புஷ்பா கேந்திவாலா வழங்கிய தீர்ப்பு மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

  • Share this:
    ஆடைக்கு மேல் தொட்டு பாலியல் சீண்டலில் ஈடுபடுவது  போக்சோ சட்டத்தின் கீழ் வராது என்ற மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

    39 வயது நபர் 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில் அமர்வு நீதிமன்றம் அந்த 39 வயது நபரை குற்றவாளி என்று தீர்ப்பளித்து போக்சோ சட்டத்தின் கீழ் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை அளித்தது.  இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்த மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை  நீதிபதி புஷ்பா கேந்திவாலா , சிறுமியின் ஆடையை களையாமல் தான் அவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

    உடலும் உடலும் நேரடியாக தொடர்பில் இல்லாததால் இது போக்சோ சட்டத்தில் வராது. அதேவேளையில், பெண்ணின் மானத்துக்கு களங்கம் கற்பிக்க முயன்றார் என்ற அளவில்தான் தண்டனை வழங்க முடியும் என்று குறிப்பிட்டார். போக்சோவில் தொடரப்பட்ட வழக்கையும் ரத்து செய்தார்.  அவரது இந்த தீர்ப்பு மிகப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    தீர்ப்பை எதிர்த்து அட்டர்ஜி ஜெனரல் மற்றும் தேசிய மகளிர் ஆணையம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. நீதிபதி உதய் உமேஷ் லலித், நீதிபதி எஸ் ரவீந்திர பட் மற்றும் நீதிபதி பேலா எம் திரிவேதி அடங்கிய அமர்வு இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்தது. அப்போது, போக்சோ பிரிவு 7 இன் கீழ் 'தொடுதல்' அல்லது 'உடல் தொடர்பு' ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவது அபத்தமானது மற்றும் குழந்தைகளை பாதுகாக்க இயற்றப்பட்ட சட்டத்தின் நோக்கத்தை அழித்துவிடும் என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. 

    இதையும் படிங்க: தவறான கைகளுக்கு போய்விடக் கூடாது: கிரிப்டோகரன்சி குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!


    பாலியல் வன்கொடுமை குற்றத்தின் மூலப்பொருள் பாலியல் நோக்கமே தவிர உடல்- உடல் தொடர்புடையது அல்ல. ஒரு விதியை உருவாக்குவது அதற்கு வலு சேர்க்க வேண்டுமே தவிர அதனை அழித்துவிட கூடாது. சட்டத்தின் நோக்கம் குற்றவாளியை சட்டத்தின் கண்ணிகளில் இருந்து தப்பிக்க அனுமதிப்பதாக இருக்க முடியாது.’ என்று தெரிவித்த நீதிமன்றம், மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்தது.

    மேலும் படிங்க: இஸ்லாமியர்கள் தொழுவதற்கு குருத்வாராவில் இடம் அளித்த சீக்கியர்கள்!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: