சபரிமலை தீர்ப்பை முழுமையாக படித்துவிட்டு பேசுங்கள் - மத்திய அரசு வழக்கறிஞருக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

சபரிமலை தீர்ப்பை முழுமையாக படித்துவிட்டு பேசுங்கள் - மத்திய அரசு வழக்கறிஞருக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்
உச்ச நீதிமன்றம் (கோப்புப் படம்)
  • News18 India
  • Last Updated: November 15, 2019, 12:17 PM IST
  • Share this:
உச்ச நீதிமன்ற தீர்ப்புகளோடு விளையாட வேண்டாம் என்றும் சபரிமலை தீர்ப்பை முழுமையாக படித்து பேசுங்கள் என்று மத்திய அரசு வழக்கறிஞருக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே சிவக்குமாருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் வழங்கிய ஜாமினை ரத்து செய்யக்கோரி அமலாக்கத்துறை தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதி நாரிமன் இன்று விசாரித்தார்.

வாதங்களை அடுத்து ஜாமினை ரத்து செய்ய முடியாது என்று அமலாக்கத்துறையின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.


விசாரணையில், ப.சிதம்பரம் வழக்கின் வாதங்கள் மற்றும் ஆவணங்கள், சிவக்குமார் வழக்கின் ஆவணங்களுக்காக காபி- பேஸ்ட் செய்யப்பட்டுள்ளதாக நீதிபதி கூறினார். மத்திய அரசின் சொசிலிட்டர் ஜெனரல் துஷர் மேஹ்தாவை நீதிபதி நாரிமன் கேள்விகளால் துளைத்தெடுத்தார்.

சபரிமலை தீர்ப்பில் நான் (நாரிமன்), சந்திரசூட் வழங்கிய தீர்ப்புகளை படியுங்கள். தீர்ப்புகளுடன் விளையாடாதீர்கள். எங்களது நிலைப்பாட்டை தீர்ப்பில் படித்து உங்கள் அரசுக்கு எடுத்துச் சொல்லுங்கள் என்று நீதிபதி நாரிமன் கூறினார்.
First published: November 15, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்