மனித உரிமைகள் பிரச்னை: காவல் நிலையங்களிலுள்ள சிசிடிவி கேமராக்கள் பற்றி அறிக்கை தாக்கல் செய்ய மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

காவல் நிலையங்களிலுள்ள சிசிடிவி கேமராக்கள் பற்றி அறிக்கை தாக்கல் செய்ய மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மனித உரிமைகள் பிரச்னை: காவல் நிலையங்களிலுள்ள சிசிடிவி கேமராக்கள் பற்றி அறிக்கை தாக்கல் செய்ய மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
உச்ச நீதிமன்றம்
  • News18 Tamil
  • Last Updated: September 16, 2020, 10:40 PM IST
  • Share this:
விசாரணையின்போது கைதிகள் துன்புறுத்தப்படுவதாக எழுந்த தொடர் குற்றச்சாட்டுகளையடுத்து, அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்த கடந்த 2015ம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

கொலைக் குற்றத்தில் தொடர்பிருப்பதாகக் கூறி இரண்டு பேரை சட்டவிரோதமாக காவல் நிலையத்தில் வைத்து 5 நாட்கள் சித்தரவதைச் செய்ததாக பஞ்சாபைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி பரம்விர் சிங் சைனி மீது 2016ம் ஆண்டு குற்றம்சாட்டப்பட்டது.

அதுகுறித்த வழக்கு விசாரணையில், அனைத்து காவல் நிலையங்களிலும் உள்ள சிசிடிவி கேமராக்கள் பற்றிய விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.


Also read: அகரம் அறக்கட்டளையில் கல்வி உதவித்தொகை பெற 7,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்

இந்நிலையில், இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது சட்டவிரோத விசாரணையைத் தடுக்கவே சிசிடிவி கேமராக்கள் பொறுத்தவும், அதை ஆய்வு செய்யவும் உத்தரவிடப்பட்டதாகவும் குறிப்பிட்ட நீதிமன்றம், பெரும்பாலான மாநிலங்கள் விரிவான அறிக்கை எதையும் இதுவரை தாக்கல் செய்யவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.

மக்களின் அடிப்படை உரிமைகள் சம்பந்தப்பட்டது என்பதால், அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களும் அந்தந்த மாநிலங்களில் எவ்வளவு காவல்நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவை குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆய்வு செய்யப்படுகின்றனவா முதலானவை பற்றி விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய  வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளது.
First published: September 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading