Home /News /national /

நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு... ம.பி.யில் காங்கிரஸ் ஆட்சி கவிழ வாய்ப்பு...!

நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு... ம.பி.யில் காங்கிரஸ் ஆட்சி கவிழ வாய்ப்பு...!

கமல் நாத்

கமல் நாத்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    மத்தியப்பிரதேசத்தில் நாளை மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மத்திய பிரதேச மாநில காங்கிரசின் முக்கிய தலைவராக திகழ்ந்த ஜோதிராதித்யா சிந்தியா, அண்மையில் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.

    இதையடுத்து சிந்தியாவின் ஆதரவு மாநில அமைச்சர்கள் 6 பேர் உள்ளிட்ட 22 எம்எல்ஏக்கள், பெங்களூருவில் உள்ள சொகுசு விடுதியில் முகாமிட்டனர்.  மேலும் 22 பேரும் தங்கள் ராஜினாமா கடிதங்களை சபாநாயகருக்கு அனுப்பி வைத்தனர்.

    அதில், சிந்தியா ஆதரவு அமைச்சர்கள் 6 பேரின் ராஜினாமாவை ஆளுநர் ஏற்றுக்கொண்டு, அமைச்சரவையில் இருந்து நீக்கினார். இதையடுத்து 6 பேரின் ராஜினாமா கடிதங்களை சபாநாயகரும் ஏற்றுக்கொண்டதால், அவர்கள் எம்எல்ஏ பதவியையும் இழந்தனர்.

    இதனை அடுத்து, முதலமைச்சர் கமல்நாத் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் உத்தரவிட்டார். இதையடுத்து ஜெய்ப்பூரில் தங்கியிருந்த காங்கிரஸ் எம்எல்ஏக்களும், ஹரியானாவில் தங்கியிருந்த பாஜக எம்எல்ஏக்களும் மத்திய பிரதேசம் திரும்பினர்.

    இதனை அடுத்து, முதலமைச்சர் கமல்நாத், ஆளுநருக்கு எழுதிய கடிதத்தில் பெங்களூருவில் சில எம்எல்ஏக்கள் முகாமிட்டுள்ள நிலையில், உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது ஜனநாயக விரோதமானது எனத் தெரிவித்திருந்தார். பின்னர், மீண்டும் ஆளுநர், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரினார்.

    எனினும், கொரோனா தாக்கம் காரணமாக அவை நடவடிக்கைகளை வரும் 26-ம் தேதிவரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் சிவ்ராஜ் சிங் சவ்கான், பெரும்பான்மை இல்லை என்பதை அறிந்துள்ளதால், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதை முதலமைச்சர் கமல்நாத் தவிர்ப்பதாக குற்றம்சாட்டினார்.

    48 மணி நேரத்துக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் சிவ்ராஜ் சிங் சவ்கான் மனு தாக்கல் செய்தார்.  அவருடன் மேலும் 9 பாஜக எம்எல்ஏக்களும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், நாளை மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த உத்தரவிட்டுள்ளது.

    எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்காததால், அவர்கள் அரசுக்கு எதிராக வாக்களிக்க வாய்ப்பு அதிகம் உள்ளது.இதனால், காங்கிரஸ் அரசு கவிழவே வாய்ப்பு அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




    இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


    Published by:Sankar
    First published:

    Tags: Madhya pradesh

    அடுத்த செய்தி