மருத்துவ மேற்படிப்புக்கான கலந்தாய்வை நீட்டிக்க தமிழக அரசு மனு - நாளைக்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

மருத்துவ மேற்படிப்புக்கான கலந்தாய்வை நீட்டிக்க தமிழக அரசு மனு - நாளைக்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

உச்ச நீதிமன்றம்

 • News18
 • Last Updated :
 • Share this:
  முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வை 15 நாட்களுக்கு நீட்டிக்க கோரி தாக்கல் செய்த தமிழக அரசின் மனு குறித்து மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  மருத்துவ படிப்புகளில் 50 சதவீதம் இட ஒதுக்கீட்டை நடப்பு கல்வி ஆண்டிலேயே அமல்படுத்திக்கோரிய மனு நிலுவையில் இருப்பதால், கலந்தாய்விற்கான கால அவகாசத்தை நீட்டிக்கக் கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.  Also read... நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பிக்கள் ஆர்ப்பாட்டம்: நீட் தேர்வுக்கு எதிராக கண்டன முழக்கம்...

  இந்த வழக்கு நீதிபதி நாரிமன் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம்.நட்ராஜ், மனு தொடர்பாக பதிலளிக்க ஒரு நாள் அவகாசம் கோரினார். இதனை ஏற்ற நீதிபதிகள், விசாரணையை செப்டம்பர் 16ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
  Published by:Vinothini Aandisamy
  First published: