சாதாரண புகார்களில் வழக்கறிஞர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது- நீதிபதி

வழக்கறிஞர்கள் சட்டப்படி, தவறான நடத்தை தொடர்பாக வழக்கறிஞர்களுக்கு எதிரான புகாரில் முகாந்திரம் இருந்தால் மட்டுமே கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி பானுமதி தெரிவித்துள்ளார்.

news18
Updated: August 17, 2019, 7:12 PM IST
சாதாரண புகார்களில் வழக்கறிஞர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது- நீதிபதி
வழக்கறிஞர்கள் சட்டப்படி, தவறான நடத்தை தொடர்பாக வழக்கறிஞர்களுக்கு எதிரான புகாரில் முகாந்திரம் இருந்தால் மட்டுமே கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி பானுமதி தெரிவித்துள்ளார்.
news18
Updated: August 17, 2019, 7:12 PM IST
சாதாரண புகார்களில் வழக்கறிஞர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது என உச்ச நீதிமன்ற நீதிபதி பானுமதி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஆடிட்டோரியத்தில் நடந்தது.

இந்நிகழ்வில்,  தேர்தலில் புதிய உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்ட வழக்கறிஞர்கள் பி.எஸ்.அமல்ராஜ், எஸ்.பிரபாகரன், ஆர்.விடுதலை, ஆர்.சி.பால்கனகராஜ், கே.பாலு, ஜி.மோகன கிருஷ்ணன் உள்ளிட்ட 25 உறுப்பினர்களுக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதி பானுமதி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.


இந்நிகழ்ச்சியில் பேசிய நீதிபதி ஆனந்த்வெங்கடேஷ், சட்டம் தெரிந்த வழக்கறிஞர்கள், சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டால், அவர்களை பணியில் இருந்து விலக்க வேண்டும் என புது நிர்வாகிகளுக்கு ஆலோசனை தெரிவித்தார்.

கருப்பு கோட் விதிகளை மீறுவதற்கான உரிமம் அல்ல என்பதை வழக்கறிஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் குறிப்பிட்டார்.

பயங்கரவாத தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க டில்லி உயர் நீதிமன்றத்துக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில் வழக்கறிஞர்களிடம் இருந்து பாதுகாக்கவே சி ஐ எஸ் எப் வீரர்கள் பாதுகாப்புக்கு அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் உத்தரவிட்டார் என நீதிபதி ராஜா நினைவு கூர்ந்தார்.

Loading...

பின்னர் பேசிய நீதிபதி கிருபாகரன், ஹெல்மெட் போடமாட்டேன் எனும் வழக்கறிஞரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் எனவும், சட்டம் ஒழுங்கை கட்டிக்காப்பவர்களாக வழக்கறிஞர்கள் இருக்க வேண்டும் எனவும், இல்லாவிட்டால் அவர்களை தட்டி விட வேண்டும் எனவும் பேசினார்.
கிராமப்புற இளம் வழக்கறிஞர்களுக்கு ஆங்கில பயிற்சி வகுப்புகளை நடத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

நீதிபதி சிவஞானம் பேசுகையில், பார் கவுன்சில் உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் செய்து பதவியேற்பு செய்வது இதுவே முதல் முறை எனவும், பிற மாநிலங்களிலும் இதுபோன்ற நடைமுறை இல்லை என பெருமிதம் தெரிவித்தார்.

தமிழ்நாடு பார் கவுன்சில் தேர்தல் மக்களவை தேர்தலைப் போல நடந்ததாகக் குறிப்பிட்ட நீதிபதி சசிதரன், புதிய தலைமுறை வழக்கறிஞர்கள், வருமானத்துக்காக விதிகளுக்கு புறம்பான பணிகளில் ஈடுபடாமல் தடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இறுதியாக பேசிய உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.பானுமதி, போக்குவரத்து விதிமீறலுக்காக வழக்கறிஞர்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்ற நீதிபதி கிருபாகரனின் கருத்தில் உடன்பாடு இல்லை என்றார்.

வழக்கறிஞர்கள் சட்டப்படி, தவறான நடத்தை தொடர்பாக வழக்கறிஞர்களுக்கு எதிரான புகாரில் முகாந்திரம் இருந்தால் மட்டுமே கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

சாதாரண காரணங்களுக்காக வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது எனவும் சாதாரண புகார்களில் சிக்கும் வழக்கறிஞர்களை எச்சரித்து, கண்டித்து கொள்ளலாம் என ஆலோசனை தெரிவித்தார்.

Also see...

First published: August 17, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...