ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகார்! உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முக்கிய ஆலோசனை

உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து சி.பி.ஐ, உளவுத்துறை இணை இயக்குநர்கள் மற்றும் டெல்லி காவல்துறை ஆணையர் ஆகியோர் பிற்பகலில் உச்சநீதிமன்றத்தில் ஆஜராகினர்.

ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகார்! உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முக்கிய ஆலோசனை
உச்ச நீதிமன்றம்
  • News18
  • Last Updated: April 24, 2019, 11:15 PM IST
  • Share this:
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிராக எழுப்பப்பட்டுள்ள பாலியல் வழக்கில் என்னை ஆஜராக சொல்லி வலியுறுத்தியதாக வழக்கறிஞர் உத்சவ் பெய்ன்ஸ் தொடர்ந்த வழக்கு தொடர்பாக, உளவுத்துறை, சி.பி.ஐ அமைப்புகளுடன் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிராக எழுப்பப்பட்டுள்ள பாலியல் வழக்கில் ஆஜராக வேண்டும் என்று தன்னை சிலர் அணுகியதாகவும், அதற்காக தனக்கு ஒன்றரை கோடி ரூபாய் வரை லஞ்சம் வழங்க முற்பட்டதாகவும் வழக்கறிஞர் உத்சவ் பெய்ன்ஸ் குற்றம்சாட்டினார்.

இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்த மனு நீதிபதிகள் அருண் மிஸ்ரா உள்ளிட்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. தனக்கு லஞ்சம் வழங்குவதற்காக பேரம் பேசப்பட்ட சி.சி.டி.வி காட்சிகள் மற்றும் ஆவணங்களை உச்ச நீதிமன்றத்தில் பெய்ன்ஸ் தாக்கல் செய்தார்.


இதையடுத்து இந்த வழக்கை விசாரிப்பது குறித்து ஆலோசிப்பதற்காக சி.பி.ஐ, உளவுத்துறை இயக்குநர்கள் மற்றும் டெல்லி காவல்துறை ஆணையர் உடனடியாக ஆஜராக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து சி.பி.ஐ, உளவுத்துறை இணை இயக்குநர்கள் மற்றும் டெல்லி காவல்துறை ஆணையர் ஆகியோர் பிற்பகலில் உச்சநீதிமன்றத்தில் ஆஜராகினர். அவர்களிடம் வழக்கு தொடர்பாக நீதிபதிகள் ஆலோசனை நடத்தினர். இதையடுத்து வழக்கை நாளைக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், உத்சவ் பெய்ன்ஸ் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

முன்னதாக, தலைமை நீதிபதி மீது பெண் ஊழியர் கொடுத்த பாலியல் புகார் குறித்து விசாரிக்க வேண்டிய பொறுப்பு உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி எஸ். ஏ. பாப்டேவிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர், என்.வி. ரமணா மற்றும் இந்திரா பானர்ஜி ஆகியோர் கொண்ட குழு இந்த வழக்கை விசாரிக்க உத்தரவிட்டார்.இந்நிலையில் புகார் குறித்த விசாரணையை தொடங்கியுள்ள இந்த குழு, வரும் 26 ஆம் தேதி புகார் அளித்த பெண், உச்ச நீதிமன்ற வளாகத்தில் உள்ள ரகசிய அறையில் நேரில் ஆஜராக நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

Also see:

First published: April 24, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்