உச்ச நீதிமன்ற தீர்ப்பு விபரம் தமிழ் மொழியிலும் வெளியானது!

உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் ஆங்கிலம் தவிர மாநில மொழிகளில் வெளியிடப்படும் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ஆனால், தமிழ் அதில் இடம்பெறவில்லை.

news18
Updated: July 18, 2019, 1:24 PM IST
உச்ச நீதிமன்ற தீர்ப்பு விபரம் தமிழ் மொழியிலும் வெளியானது!
உச்ச நீதிமன்ற இணையதளம்
news18
Updated: July 18, 2019, 1:24 PM IST
உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் மாநில மொழிகளில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று உச்ச நீதிமன்ற இணையதளத்தில் தமிழ் மொழியிலும் தீர்ப்பு விபரங்கள் இடம் பெற்றுள்ளன.

உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் ஆங்கிலம் தவிர மாநில மொழிகளில் வெளியிடப்படும் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ஆனால், தமிழ் அதில் இடம்பெறவில்லை.

இதனை அடுத்து தமிழிலும் தீர்ப்பு விபரங்கள் வெளியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. திமுக எம்.பி.க்கள் தலைமை நீதிபதியிடம் சென்று மனு அளித்தனர்.


இந்நிலையில், நேற்று முதல் 9 மாநில மொழிகளில் தீர்ப்பு விபரங்கள் உச்ச நீதிமன்ற இணையதளத்தில் வெளியாகியது.

இன்று தமிழில் இரு வழக்குகளின் தீர்ப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. சரவணபவன் ராஜகோபால் வழக்கு மற்றும் மற்றொரு வாரிசுரிமை தொடர்பான வழக்கின் தீர்ப்பும் தமிழில் இடம் பெற்றுள்ளன.Loading...

வட்டார மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்ட தீர்ப்புகள் புரிதலுக்காக மட்டுமே என்றும், நிறைவேற்றுதல் உள்ளிட்ட அனைத்து நடைமுறைசார் மற்றும் அதிகாரப்பூர்வசார் நோக்கங்களுக்கு தீர்ப்புரையின் ஆங்கிலப் பதிப்பே அதிகாரப்பூர்வமானதாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
First published: July 18, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...