Home /News /national /

நீதிமன்றங்களில் வழக்கு விசாரணையை நேரலை செய்யலாம்: உச்சநீதிமன்றம்

நீதிமன்றங்களில் வழக்கு விசாரணையை நேரலை செய்யலாம்: உச்சநீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்

  • News18
  • Last Updated :
    உச்சநீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்கு விசாரணைகளை நேரடியாக ஒளிபரப்பு செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

    நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்கு விசாரணைகளை நேரடியாக ஒளிபரப்ப அனுமதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் தனது பரிந்துரையை வழங்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்கு பதிலளித்த மத்திய அரசு, வழக்கு விசாரணைகளை நேரடியாக ஒளிபரப்புவது மற்றும் வீடியோ பதிவு செய்வதை சோதனை அடிப்படையில் தொடங்கலாம் என தெரிவித்திருந்தது.

    இதனையடுத்து கடந்த ஆகஸ்ட் 24- ம் தேதி இந்த வழக்கின் விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று இதற்கான தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பில் உச்சநீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து நீதிமன்றங்களிலும் நடைபெறும் வழக்குகளை நேரலை செய்யலாம் என்று உத்தரவிடப்பட்டது.

    மேலும் இந்த நேரலை ஒளிபரப்பு, வழக்கின் வெளிப்படை தன்மையை கொண்டும் வரும் என்றும் முக்கியமான வழக்குகளுக்கு இந்த நேரலை ஒளிபரப்பு அவசியம் என்ற கருத்தையும் நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த தீர்ப்பை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலமையிலான அமர்வு வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

    ALSO WATCH...

    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: All Cases, All courts, Live telecast, Permission for live, SC judgement

    அடுத்த செய்தி