உச்ச நீதிமன்றத்தில் நிர்பயா வழக்கு விசாரணையில் மயங்கி விழுந்த நீதிபதி பானுமதி...!

- News18
- Last Updated: February 14, 2020, 2:51 PM IST
நிர்பயா குற்றவாளிகளை தனித்தனியாக தூக்கிலிட வேண்டும் என்ற மத்திய அரசின் மனு மீதான விசாரணையில் உச்ச நீதிமன்ற நீதிபதி பானுமதி மயங்கி விழுந்தார்.
நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி ஒருவர் தனது கருணை மனு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து, மேல்முறையீடு செய்துள்ளார்.
இதனால், மற்ற மூவரையும் தூக்கிலிட சட்டரீதியான சிக்கல்கள் உள்ளது. குற்றவாளிகளை தனித்தனியாக தூக்கிலிட அனுமதி வேண்டும் என்று மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, தீர்ப்பை நீதிபதி பானுமதி வாசித்துக்கொண்டிருந்தார். அப்போது, திடீரென அவர் இருக்கையில் இருந்து சரிந்து விழுந்தார்.
பாதுகாப்பு அதிகாரிகள் நீதிபதி பானுமதிக்கு முதலுதவி அளித்துள்ளனர். பின்னர், அவரது அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதனை அடுத்து, வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்படுவது ஒத்திவைக்கப்பட்டது.
நீதிபதி பாணுமதி தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி ஒருவர் தனது கருணை மனு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து, மேல்முறையீடு செய்துள்ளார்.
இதனால், மற்ற மூவரையும் தூக்கிலிட சட்டரீதியான சிக்கல்கள் உள்ளது. குற்றவாளிகளை தனித்தனியாக தூக்கிலிட அனுமதி வேண்டும் என்று மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது.