Home /News /national /

பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகள் விடுதலை விவகாரம் - குஜராத் அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகள் விடுதலை விவகாரம் - குஜராத் அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

பில்கிஸ் பானு வழக்கில் குஜராத் அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

பில்கிஸ் பானு வழக்கில் குஜராத் அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

பில்கிஸ் பானு வழக்கில் 11 குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டது தொடர்பாக குஜராத் அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Delhi, India
    பில்கிஸ் பானு கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில், குற்றவாளிகள் 11 பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு, உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, எதன் அடிப்படையில், குற்றவாளிகள் நன்னடத்தை மூலம் விடுவிக்கப்படுகிறார்கள், அதற்காக கடைப்பிடிக்கப்படும் விதிமுறைகள் என்ன என்று கேள்வி எழுப்பியது. அத்துடன், குற்றவாளிகள் விடுதலை பெற தகுதியுடையவர்களா என்பதை ஆராய வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.

    இந்த வழக்கில் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டது தொடர்பாக குஜராத் அரசு பதிலளிக்கவும், விடுதலை செய்யப்பட்ட 11 பேரையும் வழக்கில் சேர்க்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 2002 குஜராத் கலவரத்தின் போது பாதிக்கப்பட்ட பெண்மணி பில்கிஸ் பானோ. குஜராத் கலவரங்களின் போது 21 வயதான பில்கிஸ் பானோ என்பவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். அவர் அப்போது 5 மாத கர்ப்பிணியாகவும் இருந்தார். இது மட்டுமல்லாமல் பில்கிஸ் பானோவின் 2 வயது குழந்தை உள்பட குடும்பத்தினர் 7 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர்.

    2004ஆம் ஆண்டு இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் 11 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர், 2008 -ம் ஆண்டு மும்பையிலுள்ள சிறப்பு மத்திய புலனாய்வுப் பிரிவு நீதிமன்றம், 11 குற்றவாளிகளுக்குப் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை விதித்தது.

    இதையும் படிங்க: பறிபோகும் ஜார்கண்ட் முதல்வர் பதவி.. ஹேமந்த் சோரேனை தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரை

    இந்நிலையில் கடந்த வாரம் 75-வது சுதந்திர தினத்தையொட்டி, ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய பரீசிலிக்கும் படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு நெறிமுறைகளை அனுப்பியிருந்தது. ஆனால் இதில் பாலியல் வன்கொடுமை செய்தவர்களை விடுவிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

    ஆனால் இந்த தடையை மீறி குஜராத் அரசு பில்கிஸ் பானோ கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து அவரது குடும்பத்தினர் 7 பேரையும் கொன்ற 11 குற்றவாளிகளை விடுதலை செய்துள்ளது.இதற்கு பல்வேறு தரப்பினர் கொந்தளிப்போடு கடும் எதிர்ப்பினை தெரிவித்துவருகின்றனர்.
    Published by:Kannan V
    First published:

    Tags: Gujarat, Supreme court

    அடுத்த செய்தி