அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு நோட்டீஸ்: மோடி குறித்த பேச்சால் தொடரும் சிக்கல்!

அந்த வழக்கில், ’தவறாக பேசிவிட்டேன்’ என்று ராகுல் காந்தி நேற்று வருத்தம் தெரிவித்தார். இதுதொடர்பான வழக்கு இன்று மீண்டும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு நோட்டீஸ்: மோடி குறித்த பேச்சால் தொடரும் சிக்கல்!
ராகுல் காந்தி
  • News18
  • Last Updated: April 23, 2019, 5:53 PM IST
  • Share this:
ராகுல் காந்திக்கு எதிராக தொடரப்பட்ட நீதிமன்ற அவதூறு வழக்கில் விளக்கம் கேட்டு அவருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அளித்துள்ளது.

ரஃபேல் விவகாரத்தில் முறைகேடுகள் நடைபெற்றதாக தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பின்னர், அந்த விவகாரம் தொடர்பாக தி இந்து ஆங்கில நாளிதழில் வெளியான ஆதாரத்தின் அடிப்படையில் உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தள்ளபடி செய்யப்பட்டது.

திருடப்பட்ட ஆவணங்களில் அடிப்படையில் தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மத்திய அரசின் வாதத்தை ஏப்ரல் 10-ம் தேதி உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், வழக்கை விசாரணைக்கு ஏற்றது. உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவைக் குறிப்பிட்டு, மோடியை திருடன் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது என்று ராகுல் காந்தி பேசினார்.


அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ராகுல் காந்தியின் மீது பா.ஜ.க எம்.பி. மீனாட்சி லேகி உச்ச நீதிமன்றத்தில், நீதிமன்ற அவதூறு வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கில், ’தவறாக பேசிவிட்டேன்’ என்று ராகுல் காந்தி நேற்று வருத்தம் தெரிவித்தார். இதுதொடர்பான வழக்கு இன்று மீண்டும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது பா.ஜ.க சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, ‘நீதிமன்றத்தின் உத்தரவைக் குறிப்பிட்டு ’காவலனே ஒரு திருடன்’(Chowkidar Chor hai) என்று பேசியதற்கு ராகுல் காந்தி இதுவரையில் மன்னிப்பு கேட்கவில்லை. சட்டத்தின் பார்வையில் வருத்தம் தெரிவிப்பது என்பது மன்னிப்பு கேட்பது ஆகாது’ என்று தெரிவித்தார்.

ராகுல் காந்தியின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சிங்வி, ‘ரஃபேல் விவகாரம் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை குறிப்பிட்டு தவறாக பேசியதற்காக ராகுல் காந்தி வருத்தம் தெரிவித்துவிட்டார். அரசியல் பிரசாரத்தில் தவறுதலாக பயன்படுத்தப்பட்டுவிட்டது. ரஃபேல் விவகாரத்தில் தன்னை குற்றமற்றவர் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துவிட்டது என்று நீதிமன்றத்தின் தீர்ப்பை மோடியும் தவறுதலாக பயன்படுத்தியுள்ளார். ராகுல் காந்தி வருத்தம் தெரிவித்துவிட்டதால், அவதூறு வழக்கைத் தள்ளுபடி செய்யவேண்டும்’ என்று தெரிவித்தார்.இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இதுதொடர்பாக விளக்கம் அளிக்கவேண்டும் என்று ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை, ஏப்ரல் 30-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Also see:

First published: April 23, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading