நீதிமன்ற அவமதிப்பு விவகாரத்தில் சிபிஐ கூடுதல் இயக்குநருக்கு ரூ.1 லட்சம் அபராதம்!

நாகேஸ்வர ராவுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்ததோடு, இன்று முழுவதும் நீதிமன்ற அறையை விட்டு வெளியே செல்லக்கூடாது என்று உத்தரவிட்டனர்.

news18
Updated: February 12, 2019, 12:39 PM IST
நீதிமன்ற அவமதிப்பு விவகாரத்தில் சிபிஐ கூடுதல் இயக்குநருக்கு ரூ.1 லட்சம் அபராதம்!
உச்சநீதிமன்றம்
news18
Updated: February 12, 2019, 12:39 PM IST
முசாபர்பூர் அரசு பெண்கள் காப்பகம் தொடர்பான வழக்கில் சிபிஐ கூடுதல் இயக்குநர் நாகேஸ்வரராவ் நீதிமன்ற அவமதிப்பு செய்துள்ளது உறுதியாகியுள்ளதாக தலைமை நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

பீகார் மாநிலம் முசாபர்பூர் அரசு பெண்கள் காப்பகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்பாக சிபிஐ விசாரணை நடந்து வருகிறது. விசாரணை அதிகாரியாக இருந்த ஏ.கே சர்மா திடீரென இடமாற்றம் செய்யப்பட்டார்.

உச்ச நீதிமன்றத்தின் நேரடி பார்வையில் விசாரணை நடந்து வரும் நிலையில், விசாரணை அதிகாரி மாற்றம் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து, இவ்விகாரத்தில் சிபிஐ இடைக்கால இயக்குநராக இருந்த நாகேஷ்வர ராவ் ஆஜராக தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உத்தரவிட்டார்.

CBI, Lok Ranjan, Nageswara Rao
நாகேஸ்வர ராவ்


உத்தரவின் அடிப்படையில் நாகேஷ்வர ராவ் இன்று ஆஜரானார். வழக்கு விசாரணையில் “இடைக்கால இயக்குநர் அதிகாரிகளை இடமாற்றம் செய்யும் போது உச்சநீதிமன்றத்தை ஆலோசித்திருக்க வேண்டும்” என்று தலைமை நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.

மத்திய அரசின் சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் கே.கே வேணுகோபால் இவ்விவகாரத்தில் நாகேஸ்வர ராவ் மற்றும் சிபிஐ சட்ட அலோசகரின் பகிரங்க மன்னிப்பை நீதிமன்றம் ஏற்க வேண்டும் என்று தெரிவித்தார். எனினும், மன்னிப்பை ஏற்க தலைமை நீதிபதி மறுத்துவிட்டார்.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்.


நீதிமன்ற அவமதிப்பு நடந்திருப்பது உறுதியாகியுள்ளது என்று கூறிய தலைமை நீதிபதி, ஏ.கே சர்மாவை மீண்டும் விசாரணை அதிகாரியாக நியமித்து உத்தரவிட்டார்.

மேலும், நாகேஸ்வர ராவுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்ததோடு, நீதிமன்ற அலுவல்கள் இன்று முடியும் வரை மூலையில் சென்று உட்காருங்கள் என்று உத்தரவிட்டனர்.

Also See..

First published: February 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...