• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • கொரோனா காலத்தில் அரசு வங்கிகள் வணிக லாபத்தை மட்டுமே பார்க்கக் கூடாது - மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

கொரோனா காலத்தில் அரசு வங்கிகள் வணிக லாபத்தை மட்டுமே பார்க்கக் கூடாது - மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்

கொரோனா காலத்தில் அரசு வங்கிகள் வணிக லாபத்தை மட்டுமே பார்க்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    கொரோனா ஊரடங்கினால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வங்கிகள், நிதி நிறுவனங்களில் பெற்ற கடன்களுக்கான மாதத்தவணை செலுத்த மார்ச், ஏப்ரல் மற்றும் மே ஆகிய மாதங்களுக்கு அவகாசம் வழங்கி ஆர்பிஐ உத்தரவு பிறப்பித்தது.

    பின்னர் அது ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டது. மாதத்தவணை செலுத்த இயலாதவர்கள், அதுகுறித்து சம்பந்தப்பட்ட வங்கிக்கோ, நிதி நிறுவனத்துக்கோ இ-மெயில் மூலமாக தகவல் தெரிவித்தால், அந்த மூன்று மாதங்களுக்கு கடன் ஒத்திப்போடப்படும் என்று ஆர்பிஐ தெரிவித்தது.

    Also read... ’கருப்பர் கூட்டம்’ சுரேந்திரன் மீதான குண்டர் சட்டத்திற்கு எதிராக மனைவி மனு - காவல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

    ஆனால், அவகாசம் வழங்கப்பட்ட காலத்துக்கான வட்டியை தள்ளுபடி செய்ய அனுமதிக்க முடியாது வங்கிகள் அறிவித்தது. மேலும் சில வங்கிகள் வட்டிக்கு வட்டி வசூலிக்கின்றன என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

    இந்நிலையில், வங்கிகளின் அறிவிப்பை எதிர்த்து பல்வேறு தொழில்த்துறை நிறுவனங்கள், தனி நபர்கள் மற்றும் அமைப்புகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.



    கால அவகாசம் வழங்கப்பட்ட மாதங்களுக்கான வட்டி வசூலிப்பு தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் மற்றும் ரிசர்வ் வங்கி கலந்தாலோசித்து இறுதி முடிவு எடுக்கக்கூறி கடந்த ஜூலை 17-ம் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்த்து.

    ஆனால், உச்சநீதிமன்ற உத்தரவிற்குப்பிறகு ஒருமாத காலம் ஆகியும் எந்தவொரு அறிவிப்பையும் மத்திய அரசு வெளியிடவில்லை என இன்றைய வழக்கு விசாரணையின் போது மனுதாரர்கள் சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது.

    இது தொடர்பாக, மத்திய அரசின் நிலைபாட்டை தெளிவுபடுத்தும் படி சொலிசிட்டர் ஜெனரலிடம் நீதிபதி அருண் மிஸ்ரா கூறினார். அதற்கு அவர் இந்த விவகாரத்தில் ரிசர்வ் வங்கி என்ன முடிவு எடுக்கிறதோ அதை ஏற்பதாகத் தெரிவித்தார்.

    ஆனால் நீதிபதிகள், "மத்திய அரசு ரிசர்வ் வங்கிக்குப் பின்னால் ஒளிந்து மத்திய அரசு கொள்ள இயலாது. வட்டிக்கு வட்டி விதிப்பதை எப்படி அனுமதிக்க முடியும்? கொரோனா காலத்தில் அரசு வங்கிகளின் வணிக லாபத்தை மட்டுமே பார்க்க கூடாது" என கண்டனம் தெரிவித்தனர்.

    பின்னர், ஒருவாரத்தில் இறுதி முடிவு எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கை செப்டம்பர் ஒன்றாம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: