முகப்பு /செய்தி /இந்தியா / இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானிக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு: உச்சநீதிமன்றம் உத்தரவு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானிக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு: உச்சநீதிமன்றம் உத்தரவு

உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்

  • 1-MIN READ
  • Last Updated :

ராக்கெட் தொழில்நுட்ப ரகசிய தகவல்களை 1994-ம் ஆண்டு வெளிநாட்டிற்கு வழங்கியதாக தொடரப்பட்ட வழக்கில் ஆதாரம் இல்லை என இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு இழப்பீடு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இஸ்ரோ-வின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் ராணுவ ரகசிய தகவல்களை வெளிநாட்டிற்கு வழங்கியதாக அவர்மீது வழக்கு போடப்பட்டது. அதிலும் குறிப்பாக 1994-ம் ஆண்டு மாலத்தீவு உளவு பிரிவைச் சேர்ந்த மரியம் ரஷிதா மற்றும் பெளஷியா குசேன் மூலமாக ரஷ்யா மற்றும் பாகிஸ்தானுக்கு இஸ்ரோவின் ரகசியங்களை விற்பனை செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டு 50 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனை எதிர்த்து அவர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார். அப்போது நடத்தப்பட்ட விசாரணையில் அவர்மீது எந்தவித குற்றமும் இல்லை என்று நிரூபனமானது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நம்பி நாராயணனுக்கு எதிராகா எந்தவிதமான ஆதாரங்களும் சமர்ப்பிக்கபடவில்லை என்று கூறி அவருக்கு 50,00,000ரூபாய்  இழப்பீடு தொகையை வழங்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.

First published:

Tags: Central govt, Narayana nambi, Rocket Scam, SC