பாபர்மசூதி இடிப்பு வழக்கை 9 மாதத்திற்குள் முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் மீதான பாபர் மசூதி இடிப்பு வழக்கு விசாரணை உத்தரப்பிரதேச மாநிலத்தின் லக்னோவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

news18
Updated: July 20, 2019, 12:38 AM IST
பாபர்மசூதி இடிப்பு வழக்கை 9 மாதத்திற்குள் முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!
பாபர் மசூதி (கோப்புப் படம்), உச்ச நீதிமன்றம்
news18
Updated: July 20, 2019, 12:38 AM IST
பாபர் மசூதி இடிப்பு வழக்கு விசாரணையை ஒன்பது மாதங்களுக்குள் முடிக்கவேண்டும் என லக்னோவில் உள்ள கீழமை நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் மீதான பாபர் மசூதி இடிப்பு வழக்கு விசாரணை உத்தரப்பிரதேச மாநிலத்தின் லக்னோவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

அந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ நீதிமன்ற நீதிபதி எஸ்.கே. யாதவ் வரும் செப்டம்பர் மாதம் 30-ம் தேதி பணி ஓய்வுபெறவுள்ளார். அதை சுட்டிக்காட்டி வழக்கு விசாரணையை விரைந்து முடிப்பதற்காக தன் பணிக்காலத்தை நீட்டிக்க கோரிக்கை விடுத்து உச்ச நீதிமன்றத்துக்கு நீதிபதி யாதவ் கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில் நீதிபதி யாதவின் பதவிக்காலத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டித்துள்ள உச்ச நீதிமன்றம், இன்றில் இருந்து ஒன்பது மாதங்களுக்குள் வழக்கை முடிக்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

Also see...

First published: July 19, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...