ஆண்களின் திருமண வயதை 18 ஆக குறைக்க கோரிய வழக்கு தள்ளுபடி

ஆண்களின் திருமண வயதை 18 ஆக குறைக்க கோரிய வழக்கு தள்ளுபடியானது.

ஆண்களின் திருமண வயதை 18 ஆக குறைக்க கோரிய வழக்கு தள்ளுபடி
மாதிரிப் படம்
  • News18
  • Last Updated: October 22, 2018, 10:34 PM IST
  • Share this:
ஆண்களின் திருமண வயதை 18 ஆக குறைக்க கோரிய வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

வழக்கறிஞர் அசோக் பாண்டே என்பவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ராணுவத்தில் சேரவும், வாக்களிக்கவும் 18 வயது போதுமானதாக இருக்கும்போது, ஆண்களின் மண வயதை 18 ஆக ஏன் குறைக்க கூடாது? என கேட்டிருந்தார்.

இவ்வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்ஜன் கோகாய் தலைமையிலான அமர்வு, 18 வயதுடையவர்கள் நேரில் வந்து கோரிக்கை வைத்தால் அதுபற்றி யோசிக்கலாம் எனக் கூறியதோடு, வழக்கறிஞர் அசோக் பாண்டேவிற்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்தனர்.
First published: October 22, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்