ரஃபேல் ஒப்பந்தத்தை ரத்து செய்ய தேவையில்லை - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

Rafale Deal | உள்நாட்டில் விமானத்தை உற்பத்தி செய்யும் நிறுவனத்தை தேர்வு செய்ததில் முறைகேடு நடைபெற்றதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது.

ரஃபேல் ஒப்பந்தத்தை ரத்து செய்ய தேவையில்லை - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
உச்ச நீதிமன்றம்
  • News18
  • Last Updated: December 14, 2018, 10:47 AM IST
  • Share this:
ரஃபேல் ஒப்பந்த முறைகேடு புகார் தொடர்பாக விசாரணை நடத்தக் கோரிய வழக்கில், போர் விமானம் வாங்கும் அரசின் கொள்கை முடிவு சரியானதே என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, 2012-ம் ஆண்டு பிரானஸ் நாட்டிடம் இருந்து 126 ரஃபேல் போர் விமானங்கள் வாங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. பின்னர் மத்தியில் ஆட்சி மாறிய நிலையில், ரஃபேல் விமானங்கள் வாங்குவது தொடர்பாக பிரான்ஸ் அரசுடன் மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கியது.

தொடர்ந்து 2015-ம் ஆண்டு பிரான்சை சேர்ந்த டசால்ட் நிறுவனத்திடம் 36 விமானங்கள் வாங்குவதற்காக 58,000 கோடி ரூபாய் புதிய ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் நிர்ணயித்த விலையை விட பலமடங்கு விலை உயர்த்தப்பட்டுள்ளதாகவும், உள்நாட்டில் விமானத்தை உற்பத்தி செய்யும் நிறுவனத்தை தேர்வு செய்ததில் முறைகேடு நடைபெற்றதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது.


ரஃபேல் போர் விமானம்


இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், இது குறித்து நீதிமன்ற கண்காப்பில் விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், வழக்கறிஞர்கள் எம்.எல்.சர்மா, வினித் தண்டா, முன்னாள் அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், ரஃபேல் ஒப்பந்தம் குறித்த ஆவணங்களை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். அதன்படி மத்திய அரசு தாக்கல் செய்தது.மேலும், ரஃபேல் ஒப்பந்ததின் முழு விவரங்களை வெளியிட்டால், அது எதிரிகளுக்கு சாதகமாக அமையும் என மத்திய அரசு தெரிவித்தது. இரண்டு தரப்பு வாதங்களும் கடந்த மாதம் 14-ம் தேதி முடிவடைந்த நிலையில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு ஒத்திவைத்தது.

இந்நிலையில், போர் விமானங்கள் வாங்கும் அரசின் கொள்கை முடிவு சரியானதே, சந்தேகம் எழாத நிலையில் ஒப்பந்தத்தை ரத்து செய்ய தேவையில்லை என்று கூறிய நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்வதாக தீர்ப்பு அளித்தனர்.

Also see... திருமணமான மூன்றே மாதங்களில் இளைஞர் தற்கொலை!
First published: December 14, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading