முகப்பு /செய்தி /இந்தியா / எழுவர் விடுதலையில் நீதிமன்றத்தைக் காரணம் காட்டி ஆளுநர் தயக்கம் காட்ட வேண்டாம் - உச்ச நீதிமன்றம்

எழுவர் விடுதலையில் நீதிமன்றத்தைக் காரணம் காட்டி ஆளுநர் தயக்கம் காட்ட வேண்டாம் - உச்ச நீதிமன்றம்

சிறையில் உள்ள 7 பேர்

சிறையில் உள்ள 7 பேர்

விடுதலை குறித்து ஆளுநரே முடிவெடுக்க வேண்டும் என்றும் அதற்கு யாரும் தற்போது தடையாக இல்லை என்றும் ஒரு கருத்தையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முன்வைத்தனர்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரின் விடுதலைக்கு எதிராக தொடரப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ராஜிவ் காந்தியின் கொலை வழக்கில் தொடர்புடைய ஏழு பேரின் விடுதலைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் குண்டுவெடிப்பில் இறந்தவர்களின் உறவினர்களின் சார்பாக 9 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அமெரிக்கை நாராயணன், சாதிக் அலி உள்ளிட்ட 9 பேர் தொடர்ந்த மனுவில் இந்த 7 பேரின் விடுதலை ஏற்கத்தக்கது அல்ல என்றும், குண்டு வெடிப்பில் தொடர்புடைய அவர்களை எந்த காரணத்தைக் கொண்டும் விடுதலை செய்யக் கூடாது என்றும் அவர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்டது.

இதனை கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஏற்கெனவே இந்த 7 பேர் விடுதலை குறித்து முடிவுகள் எடுக்கப்பட்டு இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் தற்போது இந்த வழக்கு குறித்து எந்த முடிவும் எடுக்க முடியாது என்றும், இவர்களின் விடுதலை குறித்து ஆளுநரே முடிவெடிப்பார் என்றும் கூறிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அந்த 9 பேரின் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

மேலும் 7 பேரில் விடுதலைக் குறித்து தமிழக அரசு சார்பில் வாதிட்ட போது, தமிழக அரசு சார்பில் எழுவர் விடுதலைக் குறித்து ஆளுநருக்கு பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது. அதற்கு ஆளுநர் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருக்கும் போது எந்த முடிவையும் எடுக்க முடியாது என்று கூறியதையும் நீதிமன்றத்தில் தங்களது வாதத்தின் போது தமிழக அரசு முன்வைத்தது.

அதற்கு மறுப்பு தெரிவித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், எழுவர் விடுதலை குறித்து ஆளுநரே முடிவெடுக்க வேண்டும் என்றும் அதற்கு யாரும் தற்போது தடையாக இல்லை. நீதிமன்றத்தை காரணம் காட்டி ஆளுநர் தயக்கம் காட்ட வேண்டிய தேவை இல்லை என்றும் ஒரு கருத்தை முன்வைத்தனர்.

Also see...

First published:

Tags: Perarivalan, Rajiv case, Rajiv death case