முகப்பு /செய்தி /இந்தியா / முகேஷ் அம்பானி மற்றும் குடும்பத்தினருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு.. உச்சநீதிமன்றம் உத்தரவு..!

முகேஷ் அம்பானி மற்றும் குடும்பத்தினருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு.. உச்சநீதிமன்றம் உத்தரவு..!

முகேஷ் அம்பானி மற்றும் குடும்பத்தினர்

முகேஷ் அம்பானி மற்றும் குடும்பத்தினர்

ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உச்சகட்ட Z+ பிரிவு பாதுகாப்பு வழங்கும்படி உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

நாட்டின் மிகவும் பிரபலமானவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு உளவுத்துறை கொடுக்கும் தகவலின் அடிப்படையில் மத்திய அரசு பாதுகாப்பு கொடுத்து வருகிறது. வி.ஐ.பி-க்கள், வி.வி.ஐ.பி-க்கள், விளையாட்டு துறை, பொழுதுபோக்குத்துறை, அரசியல்வாதிகளுக்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டு வருகிறது.

தற்போது, ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு மிக உயர்ந்த அளவிலான Z+ பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்த கிருஷ்ணா முராரி, அசானுதின் அமனுல்லா ஆகியோர் அமர்வு, முகேஷ் அம்பானி குடும்பத்தின் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாக மகாராஷ்டிரா அரசு மற்றும் உள்துறை அமைச்சகங்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

இதையும் படிங்க; ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் நிச்சயதார்த்த விழா : நீலம் - தங்க நிற உடையில் ஜொலித்த மணமக்கள்..!

Z+ பாதுகாப்புக்கு ஆகும் செலவை முகேஷ் அம்பானியின் குடும்பத்தினரிடமே வசூலிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

First published:

Tags: Mukesh ambani, Supreme court